அயனி
From Wikipedia, the free encyclopedia
அயன் இங்கு வழிமாற்றப்படுகிறது. திரைப்படம் பற்றி அறிய அயன் (திரைப்படம்) ஐப் பார்க்க.
மின்னூட்டணு அல்லது அயனி (Ion) என்பது ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டத்தைக் குறிக்கின்றது. அயனி ஈழத்தில் அயன் என்றும் வழங்கப்படுகிறது. வேதியியல் அல்லது இயற்பியல் செயல்பாடுகளின் மூலமாக அயனிகளை உருவாக்க இயலும். அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக தங்கள் அணு அமைப்பின் மேலோட்டிலுள்ள எலக்ட்ரான்களை இழந்தோ ஏற்றோ அயனியாக்கம் அடைகின்றன. அயனிகளில் நேர்மின்னிகளின் எண்ணிக்கையை விட எதிர்மின்னி எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும்.