அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர்
From Wikipedia, the free encyclopedia
அரசு கழக ஆய்வு நல்கைகள் (Fellowship of the Royal Society) (அரசு கழக ஆய்வுறுப்பினர்(FRS), அரசு கழக அயலக ஆய்வுறுப்பினர்(ForMemRS), அரசு கழகத் தகைமை ஆய்வுறுப்பினர்(HonFRS) என்பது இலண்டன் அரசு கழக ஆய்வுறுப்பினர்களால் தனியருக்கு நல்கப்படும் "இயற்கை அறிவு, கணிதவியல், பொறியியல்சார் அறிவியல் , மருத்துவம்சார் அறிவியல் புலங்களின் அறிவை வளர்க்க கணிசமான பங்களிப்புகளை நிகழ்த்தியதற்காக" நல்கையாகும்".[1]
அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர் Fellowship of the Royal Society | |
---|---|
Headquarters of the Royal Society in Carlton House Terrace in London | |
விருது வழங்குவதற்கான காரணம் | "Contributions to the improvement of natural knowledge"[1] |
இதை வழங்குவோர் | Royal Society |
தேதி | 1663; 361 ஆண்டுகளுக்கு முன்னர் (1663) |
Location | London |
நாடு | United Kingdom |
Total no. Fellows | Approximately 8,000[2] (1,743 living Fellows) |
நெடுங்காலமாக தொடர்ந்து நிலவும் மிகப் பழைய அறிவியல் கழகத்தின் ஆய்வுநல்கை என்பது கணிசமான உயர்தகைமையின் குறியீடாகும். வரறு நெடுக, பல தகைமை சான்ற அறிவியல் அறிஞர்களூக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவரில் ஐசாக் நியூட்டன் (1672),[2] சார்ல்ஸ் பாபேஜ் (1816), [2] மைக்கேல் பரடே (1824),[2] சார்லசு டார்வின் (1839),[2] எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (1903),[3] சீனிவாச இராமானுசன் (1918),[4] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1921),[5] பால் டிராக் (1930), வின்ஸ்டன் சர்ச்சில் (1941), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1944),[6] டோரதி ஓட்ச்கின் (1947),[7] அலன் டூரிங் (1951),[8] லீஸ் மெயிட்னர் (1955)[9] and Francis Crick (1959).[10][11] மிக சமீபத்தில், நல்கைகள் வழங்கப்பட்ட ஸ்டீவன் ஹாக்கிங் (1974), டேவிட் ஆட்டன்பரோ (1983), Tim Hunt (1991), எலிசபெத் பிளாக்பர்ன் (1992), ரகுநாத் அனந்த் மசேல்கர் (1998), டிம் பேர்னேர்ஸ்-லீ (2001), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2003), அத்தா-யுர்-ரகுமான் (2006),[12] ஆந்தரே கெய்ம் (2007),[13] ஜேம்ஸ் டைசன் (2015), அஜய் குமார் சூட் (2015), சுபாஷ் கோட் (2017), எலான் மசுக் (2018)[14] ஆகியோர்உள்ளிட்ட மொத்தம் 8,000 பேர்,[2] நோபெல் பரிசாளர் 280 பேரடங்கிய அற்ஞர்கள் அடங்குவர். 1900 இல் இருந்து, , 2018 அக்தோபர் வரை 1689 வாழும் ஆய்வுறுப்பினர் உள்ளனர். இவர்களில் ஆய்வுறுப்பினரும் அயலக ஆய்வுறுப்பினரும் தகைமை ஆய்வுறுப்பினரும் அடங்குவர். மேலும், இவரில் 85 பேர் நோபெல் பரிசு பெற்றவர் ஆவர்.[15]
அரசு கழக ஆய்வுநல்கையை ஒவ்வொரு ஆண்டும் தங்கள் அறிவிப்பைக் கொண்டாடும் பல நிறுவனங்களுடன் , " வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருதுக்கு சமமானது " என்று தி கார்டியன் இதழ் விவரித்துள்ளது.[16][17][18][19][20][21][22][23]