உலக அழகி
From Wikipedia, the free encyclopedia
உலக அழகி (Miss World) போட்டிகள் பன்னாட்டளவில் இன்றும் நடத்தப்பெறும் ஓர் மிகப் பழைமைவாய்ந்த அழகுப் போட்டி ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் எரிக் மோர்லேயால் 1951ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.[1][2] 2000ஆம் ஆண்டில் எரிக் மோர்லேயின் மறைவிற்குப் பின்னர் அவரது மனைவி ஜூலியா மோர்லே இந்த அழகுப் போட்டிக்கு இணைத்தலைவராக இருந்து வருகிறார்.[3]
உலக அழகி நிகழ்வின் சின்னம். | |
உருவாக்கம் | 1951 |
---|---|
வகை | அழகுப் போட்டி |
தலைமையகம் | லண்டன் |
தலைமையகம் | |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
தலைவர் | ஜூலியா மோர்லே |
முக்கிய நபர்கள் | எரிக் மோர்லே |
வலைத்தளம் | அலுவல்முறை இணையத்தளம் |
இதன் போட்டி நிகழ்வுகளான பிரபஞ்ச அழகி மற்றும் புவி அழகி போட்டிகளுடன் இது உலகளவில் மிகவும் பரவலாக பேசப்படும் அழகுப் போட்டிகளில் ஒன்றாகும்.[4][5]
உலக அழகிப் பட்டம் வென்றவர் உலக அழகி நிறுவனத்திற்காகவும் அதன் பல்வேறு காரணங்களுக்காகவும் பரப்புரை ஆற்றவேண்டி அவ்வாண்டு முழுமையும் உலகெங்கும் பயணிக்க வேண்டும்.[6] உலக அழகி தன்னாட்சிக் காலத்தில் லண்டனில் வசிப்பது மரபு. தற்போதைய உலக அழகியாக வெனிசுவேலாவின் இவியான் சார்கோசு உள்ளார்.