எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்
From Wikipedia, the free encyclopedia
எத்தியோபியன் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியா நாட்டு அரசாங்கத்தினால் நடத்தப்படும் விமானச் சேவையாகும். இது டிசம்பர் 21, 1945 இல் நிறுவப்பட்டது. ஏப்ரல் 8, 1946 முதல் தனது செயல்பாட்டினை துவங்கியது. ஆரம்பகாலத்தில் எதியோப்பியன் ஏர் லைன்ஸ் என்று இதன் பெயர் இருந்தது. 1965 ஆம் ஆண்டு ஒரு பங்கீட்டு நிறுவனமாக மாறியது. அப்போது இதன் பெயர் எத்தியோபியன் ஏர்லைன்ஸ் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்நிறுவனம் 1959 முதல் சர்வதேச வான்வழி போக்குவரத்து அமைப்பின் உறுப்பினராகவும், 1968 [3] முதல் ஆப்பிரிக்க ஏர்லைன்ஸ் அமைப்புகளின் (AFRAA) உறுப்பினராகவும், டிசம்பர் 2011 முதல் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினராகவும் உள்ளது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| |||||||
நிறுவல் | 21 திசம்பர் 1945; 78 ஆண்டுகள் முன்னர் (1945-12-21) | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | ஏப்ரல் 8, 1946 (1946-04-08) | ||||||
மையங்கள் | போலே பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | ShebaMiles | ||||||
கூட்டணி | இசுட்டார் அலையன்சு | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 71 | ||||||
சேரிடங்கள் |
| ||||||
தாய் நிறுவனம் | எத்தியோப்பிய அரசு (100%) | ||||||
தலைமையிடம் | போலே பன்னாட்டு வானூர்தி நிலையம், அடிஸ் அபாபா, எத்தியோப்பியா | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
Revenue | ETB 33.815 billion(FY 2012) | ||||||
நிகர வருவாய் | ETB 1.049 billion(FY 2012) | ||||||
பயனடை | ETB 2.031 billion(FY 2012)[1][2] | ||||||
மொத்த சொத்துக்கள் | ETB 26.368 billion(FY 2012) | ||||||
மொத்த சமபங்கு | ETB 2.772 billion(FY 2012) | ||||||
வலைத்தளம் | www |
இதன் தலைமை[4] மையமாக அட்டிஸ் அடாபாவில் உள்ள ‘போல் சர்வதேச விமான நிலையம்’ உள்ளது. இங்கிருந்து தான் 82 பயணிகள் இலக்குகளுக்கு தனது விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. அதில் 19 உள்நாட்டு சேவைகளும், 23 சரக்கு சம்பந்தப்பட்ட சேவைகளும் அடங்கும். ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும் விமானச் சேவைகளில் அதிக இடங்களை இலக்குகளாக கொண்டுள்ள விமான நிறுவனம் இதுவாகும். வளர்ந்துவரும் விமானச்சேவை[5][6] நிறுவனங்களில் இதுவும் ஒன்று, அத்துடன் ஆப்பிரிக்க கண்டத்தில் [7] விமானச்சேவையினை செயல்படுத்தும் நிறுவனங்களில் இந்நிறுவனம் மிகவும் பெரியது. துணை-சஹாரன் [8] பகுதிகளில் சிறிய அளவில் இலாபம் ஈட்டக்கூடிய விமான நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் கார்கோ பிரிவு “ஆப்பிரிக்கன் கார்கோ ஏர்லைன் ஆஃப் த இயர்” விருதினை 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெற்றுள்ளது.[9]