எல் (தெய்வம்)
From Wikipedia, the free encyclopedia
எல் தெய்வம் பண்டைய அண்மைக் கிழக்கின் கானான் மற்றும் அனதோலியா பகுதிகளில் வணங்கப்பட்ட தெய்வமாக கருதப்பட்டது.[2] அக்காதியம் மற்றும் அமோரித்து மொழிகளில் இத்தெய்வத்தின் பெயர் குறிப்பிட்டுள்ளது. ஆதி வடமேற்கு செமித்திய மொழியில் எல் எனும் சொல்லிற்கு கடவுள் என்று பொருளாகும்..[3]
விரைவான உண்மைகள் El-ஆங்கிலம்אֵל (எபிரேயம்) إلّ (அரபு மொழி), அதிபதி ...
El-ஆங்கிலம் אֵל (எபிரேயம்) إلّ (அரபு மொழி) | |
---|---|
எல் தெய்வத்தின் சிற்பம் | |
அதிபதி | கடவுள்களின் அரசன் |
வேறு பெயர்கள் | எல்யோன், எல் சத்தாய், அதோன் |
இடம் | லேல் குன்று |
துணை | ஆசெரா |
குழந்தைகள் | அனத், அஷ்தர், பால், மோத், சலீம், சாப்சு, யாம் |
சமயம் | லெவண்ட் (குறிப்பாக கானான் மற்றும் அனதோலியா பிரதேசங்கள் |
மூடு
எல், அல் அல்லது 'இல் எனப்படும் குறிப்பிடும் தெய்வமானது பண்டைய கானானியர்களின் உச்சக் கடவுள் ஆவார். மேலும் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்தில் கிழக்கு செமிடிக் மொழி பேசுபவர்களின் உச்ச கடவுள் எல் எனப்படும் இல் தெய்வம் ஆகும்.