எழுத்து வழக்கு
From Wikipedia, the free encyclopedia
எழுத்து வழக்கு (Letter case) என்பது குறிப்பிட்ட மொழிகளின் பெரிய எழுத்துக்கள் (uppercase) மற்றும் சிறிய சிற்றெழுத்து (lowercase) ஆகிய எழுத்துக்களுக்கு இடையே உள்ள வேறுபாடு ஆகும். எழுத்து முறைகளானது, மஜுஸ்குல் (தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்து) மற்றும் மைனஸ்குல் (ஏழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு விரைவு எழுத்து முறை- சிற்றெழுத்து) ஆகிய இரண்டு இணையான எழுத்துக்களைக் கொண்டுள்ளன. சில இணை எழுத்துகள் ஒரே வடிவத்தைக் கொண்டுள்ளன, மேலும் அவை அளவுகளில் மட்டுமே வேறுபடுகின்றன (எ.கா. ⟨C, c⟩ அல்லது ⟨S, s⟩ ), ஆனால் மற்றவற்றிற்கு வடிவங்கள் வேறுபட்டவை (எ.கா., ⟨A, a⟩ அல்லது ⟨G, g⟩ ) . இரண்டு வழக்கு மாறுபாடுகளும் ஒரே எழுத்தின் மாற்றுப் பிரதிநிதித்துவங்களாகும்: இவை ஒரே பெயரையும் உச்சரிப்பையும் கொண்டவை மற்றும் பொதுவாக அகரவரிசையில் வரிசைப்படுத்தும்போது ஒரே மாதிரியாகக் கருதப்படுகின்றன.