ஏசியானா ஏர்லைன்ஸ்
From Wikipedia, the free encyclopedia
ஏசியானா ஏர்லைன்ஸ் (Asiana Airlines) தென்கொரியாவின் இரு முக்கிய வானூர்திச்சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். மற்றைய நிறுவனம் கொரியன் ஏர். ஏசியானா ஏர்லைன்ஸ் முன்னர் சியோல் ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. சியோலின் ஏசியானாவில் இதன் தலைமையகம் உள்ளது.[2]
| |||||||
நிறுவல் | 17 பெப்ரவரி 1988; 36 ஆண்டுகள் முன்னர் (1988-02-17) | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் |
| ||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் |
| ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | ஏசியான கிளப் | ||||||
கூட்டணி | ஸ்டார் அலையன்ஸ் | ||||||
கிளை நிறுவனங்கள் |
| ||||||
வானூர்தி எண்ணிக்கை | 85 | ||||||
சேரிடங்கள் | 108 | ||||||
தாய் நிறுவனம் | கும்கோ ஏசியான குழுமம் | ||||||
தலைமையிடம் | ஓசோ-டோங்க், காங்க்சியோ-கு, சியோல், தென்கொரியா | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
Revenue | KRW\ 5,638.1 பில்லியன் (2012)[1] | ||||||
பணியாளர்கள் | 10,183 (2015) | ||||||
வலைத்தளம் | www.flyasiana.com |
இந்த விமானச் சேவையின் உள்நாட்டு மையம் கிம்போ பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இதன் சர்வதேச மையம் இங்கேயன் பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இந்த இடம் மத்திய சியோலில் இருந்து 70 கிலோ மீட்டர்கள் (43 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினரான ஏசியானா ஏர்லைன்ஸ் 14 உள்நாட்டு வழித்தடங்களிலும், 90 சர்வதேச வழித்தடங்களிலும், 27 சரக்கு வழித்தடங்களில் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியா பகுதிகளிலும் செயல்படுகிறது.[3]
டிசம்பர் 2014 இன் படி, ஏசியானா ஏர்லைன்ஸில் மொத்தம் 10,183 மக்கள் வேலை செய்கின்றனர். இதில் ஏசியானாவின் விமானிகள், விமானம் தரையிலுள்ளபோது அதன் வேலைகளை பராமாரிப்பவர்கள் மற்றும் விமானத்தின் இதர செயல்பாடுகளில் பங்குவகிப்போர் முக்கியமானவர்கள் ஆவர். ஏசியானா ஏர்லைன்ஸ், புசன் பெருநகரின் குறைந்த கட்டண விமானச் சேவையான ஏர் புசனுடன் தொடர்பு கொண்டுள்ள மிகப்பெரிய பங்குதாரர் ஆவார்கள். தென் கொரியா நாட்டின் கால்பந்து அணி மற்றும் பிரசிடென்ஸ் கோப்பை 2015 க்கான அலுவலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆதரவாளராக ஏசியான ஏர்லைன்ஸ் உள்ளது.