ஏர் நியூசிலாந்து
From Wikipedia, the free encyclopedia
ஏர் நியூசிலாந்து லிமிடெட் நியூசிலாந்து நாட்டுடன் இணைந்த தேசிய அளவிலான விமானச் சேவையாகும். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த விமானச்சேவை 25 உள்நாட்டு இலக்குகளுக்கும், 26 சர்வதேச இலக்குகளுக்கும் செயல்படுகிறது. இதன் சர்வதேச விமானச் சேவை இலக்குகளில் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்த 15 நாடுகள் அடங்கும்.[7] 1999 ஆம் ஆண்டு முதல் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினராக ஏர் நியூசிலாந்து இருந்துவருகிறது.[7]
| |||||||
நிறுவல் | 26 April 1940 (26 April 1940) (டஸ்மான் எம்பயர் ஏர்வேய்ஸ் லிமிடெட் என)[1] | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 1 ஏப்ரல் 1965 | ||||||
மையங்கள் |
| ||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் |
| ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | ஏர்பாயின்ட்சு | ||||||
கூட்டணி | இசுடார் அலையன்சு | ||||||
கிளை நிறுவனங்கள் | ஏர் நியூசிலாந்து லிங்க் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 105[2] incl. subsidiaries | ||||||
சேரிடங்கள் | 58 incl. subsidiaries | ||||||
தாய் நிறுவனம் | நியூசிலாந்து அரசு (53% உரிமையாளர்)[3] | ||||||
தலைமையிடம் | வெஸ்டர்ன் ரிக்கிளைமேசன், ஆக்லாந்து சிடி, New Zealand[4] | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
Revenue | நியூசி. டாலர் NZ$ 4,618 மில்லியன் (2013)[6] | ||||||
இயக்க வருவாய் | NZ$898 மில்லியன் (2013) | ||||||
பயனடை | NZ$262 மில்லியன் நிகர (2014) | ||||||
மொத்த சொத்துக்கள் | NZ$5,612 மில்லியன் (2013) | ||||||
மொத்த சமபங்கு | NZ$1,816 மில்லியன் (2013) | ||||||
பணியாளர்கள் | 11,000 (ஏப்ரல், 2014) | ||||||
வலைத்தளம் | www.airnewzealand.com |
டஸ்மான் எம்பயர் ஏர்வேய்ஸ் லிமிடெட் எனும் பெயருடன் 1940 ஆம் ஆண்டு ஏர் நியூசிலாந்து ஆரம்பிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் முழுவதுமாக நியூசிலாந்து அரசாங்கத்துக்கு சொந்தமானது. அதன் பின்னர்தான் ஏர் நியூசிலாந்து என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1978 ஆம் ஆண்டுவரை சர்வதேச இலக்குகளாக மட்டுமே நியூசிலாந்து அரசு ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் விமானச் சேவைகளைப் பயன்படுத்திவந்தது. பின்னர் நியூசிலாந்து தேசிய ஏர்வேஸ் கார்பரேஷனுடன் இணைந்து நியூசிலாந்து நாட்டின் உள்நாட்டு விமானச் சேவைகளையும் ஒன்றிணைத்து கொண்டது நியூசிலாந்து அரசு. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளை ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் மூலம் செய்ய முடிந்தது. 2008 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் மூலம் ஆண்டிற்கு சுமார் 11.7 மில்லியன் பயணிகள் விமானத்தில் பயணிப்பதாக தெரியவந்தது.[7]