கமல நாராயண கோயில்
11 முதல் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்துக் கோவில் / From Wikipedia, the free encyclopedia
கமல நாராயணா கோயில் (Kamala Narayana Temple) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்திலுள்ள தேவ்கானில் அமைந்துள்ளது.[1] இக்கோயில் கதம்ப வம்சத்தால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் 12 ஆம் நூற்றாண்டில் கதம்ப மன்னர் சிவசித்த பெர்மாடியின் ராணியான கமலா தேவியின் தலைமை கட்டிடக் கலைஞரான திப்போஜாவால் கட்டப்பட்டது.[2] இந்த கோயில் கி.பி.1174 இல் கட்டப்பட்டது.[2] இங்கு நாராயணன் முக்கிய தெய்வமாக இருக்கிறார்.[3]