கரி
திட எரிபொருள் / From Wikipedia, the free encyclopedia
கரி (ஒலிப்புⓘ) (ஆங்கிலம்-Charcoal) என்பது தாவரங்களும், விலங்குகளும் எரியூட்டப்படும் போது, முழுமையாக எரியா நிலையில் எஞ்சி நிற்கும் திட எரிபொருள் ஆகும். எரிக்கப்படும் பொருட்களிலுள்ள நீர், ஆவியாகும் போது கரி என்ற இத்திணமப் பொருள் கிடைக்கிறது. வழக்கமாகக் கரியை தொழிற்சாலைகளில், தீயாற்பகுப்பு / வெப்பச் சிதைவு முறையில் உருவாக்குகின்றனர்.
நம் பூமி அன்னையின் நுரையீரல் எனப்படும், அமேசான் காடுகளின் பெரும்பகுதி கரி உருவாக்கத்திற்காக அழிக்கப்படுகின்றன. பிரேசில் போன்ற சில நாடுகளின் பொருளாதார வளம் ஓரளவு இதனைச் சார்ந்தே உள்ளது. கரியைப்பயன்படுத்தவதன் மூலம் பெருமளவு சுற்றுச்சூழல் மாசு உருவாகிறது.