சில்லாங்
From Wikipedia, the free encyclopedia
சில்லாங் (Shillong) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் தலைநகரமாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 1525 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது ஒரு மலை வாழிட நகரம் ஆகும். மேலும் இது கிழக்கு காசி மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. இந்நகரத்தை கிழக்கின் ஸ்காட்லாந்து என்று அழைப்பர். [3]
விரைவான உண்மைகள் சில்லாங், நாடு ...
சில்லாங் | |
---|---|
மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் | |
அடைபெயர்(கள்): கிழக்கின் ஸ்காட்லாந்து | |
ஆள்கூறுகள்: 25.5667°N 91.8833°E / 25.5667; 91.8833 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேகாலயா |
மாவட்டம் | கிழக்கு காசி மலை |
பெயர்ச்சூட்டு | தேவதை |
அரசு | |
• நிர்வாகம் | சில்லாங் நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் | 64.36 km2 (24.85 sq mi) |
ஏற்றம் | 1,495−1,965 m (4,908−6,449 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் | 1,43,229 |
• அடர்த்தி | 234/km2 (610/sq mi) |
• பெருநகர் | 3,54,759 |
மொழி | |
• அலுவல் மொழி | ஆங்கிலம்[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 793 001 – 793 102 |
தொலைபேசி குறியீடு | 0364 |
வாகனப் பதிவு | ML-05 |
தட்ப வெப்பம் | Oceanic climate#Subtropical highland variety (Cwb) |
இணையதளம் | eastkhasihills |
மூடு
இந்நகரம் பிரம்மபுத்திரா ஆறு மற்றும் சுர்மா ஆறுகளிடையே அமைந்துள்ளது. இதன் தட்ப வெப்பம் ஆண்டு முழுமைக்கும் குளிராகவே இருக்கும். [4]
பிரித்தானிய இந்தியாவில் அசாம் மாகாணத்தின் தலைநகராக சில்லாங் இருந்தது. பின்னர் 1972-இல் அசாம் மாநிலத்தின் தெற்குப் பகுதிகளைக் கொண்டு மேகாலயா மாநிலம் உருவான போது, சில்லாங் நகரம் மேகாலாயாவின் தலைநகராக விளங்கியது.