சீவசமுளைத்தல்
சீவச முளைத்தல் / From Wikipedia, the free encyclopedia
சீவசமுளைத்தல் (vivipary) இருவேறு பொருள் கொண்டதாகப் பயன்படுத்தப்படுகின்றது. விலங்குகளில் தாய் விலங்கின் உடற்குழியின் உட்புறத்திலே நடைபெறுகின்ற முளையவிருத்தியை குறிக்கின்றது. அதாவது முட்டைகள் மூலமான முளைய விருத்திக்கு எதிரானது. தாவரங்களில் தாய்த்தாவரத்தில் இணைந்திருக்கும் நிலையிலேயே முளைய விருத்தி நடைபெறுவது. இது வித்துக்கள் நிலத்தில் முளைப்பதற்கு எதிரானது.