செஜாரா மெலாயு
மலாய் மொழி இலக்கிய வரலாற்றுப் படைப்புகளில் மிக முக்கியமான படைப்பு / From Wikipedia, the free encyclopedia
செஜாரா மெலாயு (மலாய்: Sejarah Melayu; ஆங்கிலம்: Malay Anals; ஜாவி: سجاره ملايو) என்பது மலாய் இலக்கிய வரலாற்றுப் படைப்புகளில் மிக முக்கியமான படைப்பாகும். இதன் அசல் பெயர் (மலாய்: Sulalatus Salatin; ஆங்கிலம்: Genealogy of Kings).[1][2]
இந்த இலக்கியப் படைப்பு ஏழு வகையான பதிப்புகளில் பதிப்பாகி உள்ளது. மாபெரும் கடல்சார் சாம்ராச்சியமான மலாக்கா சுல்தானகத்தின் (Malacca Sultanate) தோற்றம், பரிணாமம் மற்றும் மறைவு பற்றிய வரலாற்றைத் தொகுத்து வழங்கும் ஓர் இலக்கியப் படைப்பாகும்.[3]
15-ஆம்; 16-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்ட இந்தப் படைப்பு, மலாய் மொழியின் சிறந்த இலக்கிய வரலாற்றுப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது. இதுவரையிலும் மலாய் மொழியில் எழுதப்பட்ட சிறந்த இலக்கியப் படைப்புகளில் செஜாரா மெலாயு காப்பியம் தலைசிறந்து விளங்குகிறது.[4]