செவீயா காற்பந்தாட்டக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
செவியா கால்பந்துக் கழகம் (Sevilla Fútbol Club, S.A.D.) என்பது எசுப்பானியாவின் செவீயா நகரை அமைவிடமாகக் கொண்ட ஒரு கால்பந்துக் கழகமாகும். இக்கழகம் எசுப்பானியாவின் உயர்நிலை கால்பந்துக் கூட்டிணைவான லா லீகாவில் ஆடி வருகிறது. அக்டோபர் 14,1905, அன்று தொடங்கப்பட்ட இக்கழகம், லா லீகாவில் 1934-35 பருவத்தில் முதன்முறையாகப் பங்கேற்றது.[2]
முழுப்பெயர் | செவியா கால்பந்துக் கழகம் | |||
---|---|---|---|---|
அடைபெயர்(கள்) | Sevillistas Los Rojiblancos (The Red and Whites) Los Nervionenses (The Ones from Nervión) Los Palanganas (The Bathtubs) | |||
தோற்றம் | 14 அக்டோபர் 1905; 118 ஆண்டுகள் முன்னர் (1905-10-14) | |||
ஆட்டக்களம் | Ramón Sánchez Pizjuán, செவீயா, அந்தாலூசியா, Spain | |||
ஆட்டக்கள கொள்ளளவு | 45,500[1] | |||
அவைத்தலைவர் | José Castro Carmona | |||
மேலாளர் | Unai Emery | |||
கூட்டமைப்பு | லா லீகா | |||
2012–13 | லா லீகா, 9வது | |||
இணையதளம் | கழக முகப்புப் பக்கம் | |||
| ||||
Current season |
எசுப்பானியாவின் மிகப் பழமையான கால்பந்துக் கழகம் செவியாவாகும்.[3] ஆன்டலூசியா பிரதேசத்தில் அமைந்த கழகங்களில் மிக அதிக அளவில் வெற்றியை ருசித்த அணியாகும். இக்கழகத்தின் வெற்றிகள்:
- 1945-46 பருவத்தில் லா லீகா வாகையர் பட்டம்
- 5 கோபா டெல் ரே கோப்பைகள்
- 2 யூஈஎஃப்ஏ கோப்பை (2006, 2007)
- 1 யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை (2006)
67 பருவங்கள் முதல்நிலைக் கூட்டிணைவான லா லீகாவில் ஆடியிருக்கும் இக்கழகம், 13 முறை இரண்டாம்நிலைக் கூட்டிணைவில் ஆடியிருக்கிறது.[4] லா லீகா வரலாற்றில் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் இது ஏழாம் இடத்தில் இருக்கிறது. செவீயா நகரின் மற்றொரு முக்கிய கால்பந்துக் கழகமான ரியல் பெடிசு இவர்களின் முக்கிய எதிரிகளாவர்; ஒவ்வொரு பருவத்திலும் அவர்களுடன் மோதும் செவீயா-உள்ளூர்ப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது.