த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர்
From Wikipedia, the free encyclopedia
த ஸ்டார் ஸ்பாங்கிள்ட் பானர் (ஆங்கில மொழி: The Star-Spangled Banner, தமிழில்: விண்மீன் மின்னும் பதாகை) ஐக்கிய அமெரிக்காவின் நாட்டுப்பண் ஆகும்.
பால்ட்டிமோர் நகரில் இருக்கும் மெக்ஹென்ரி கோட்டையை (Fort McHenry) 1812 போரில் பிரித்தானியர்கள் தாக்கியதைப் பார்த்த கவிஞர் ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ "டிஃபென்ஸ் ஆஃப் ஃபோர்ட் மெக்ஹென்ரி" (மெக்ஹென்ரி கோட்டையின் காப்பு) என்று ஒரு கவிதையை எழுதினார்.
1800களில் அமெரிக்காவில் இக்கவிதை ஒரு பரவலான நாட்டுப்பற்றான பாடலாக இருந்தது. மார்ச் 3, 1931ல் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் இப்பாடலை நாட்டுப்பண்ணாக அங்கீகரித்தது.
நான்கு பகுதிகள் இருக்கும் இக்கவிதையின் முதல் பகுதி மட்டும் அமெரிக்க நாட்டுப்பண்ணாக பாடப்படுகின்றது.