நியூ அயர்லாந்து (தீவு)
From Wikipedia, the free encyclopedia
நியூ அயர்லாந்து (New Ireland, பிசின மொழி: Niu Ailan, நியூ ஐலான்) என்பது பப்புவா நியூ கினியில் அமைந்துள்ள ஒரு பெரிய தீவாகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 7,404 கிமீ², மக்கள்தொகை ஏறத்தாழ 120,000 பேர்.[2] நியூ பிரிட்டன் தீவுக்கு வடகிழக்கே உள்ள இத்தீவு நியூ அயர்லாந்து மாகாணத்தின் மிகப் பெரிய தீவாகும். பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் உள்ள இவ்விரண்டு தீவுகளும் செயிண்ட் ஜோர்ஜசு கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தீவின் நிருவாக மையம் அதன் வட முனையில் காவியெங் நகரில் உள்ளது. இத்தீவு செருமனியின் ஆட்சிக்குள்ளாயிருந்த போது "நியூமெக்லென்பெர்க்" (Neumecklenburg) என அழைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் புவியியல், ஆள்கூறுகள் ...
நியூ அயர்லாந்தின் முக்கிய நகரங்களும், அயல் தீவுகளும் | |
புவியியல் | |
---|---|
ஆள்கூறுகள் | 3.33°S 152°E / -3.33; 152 |
தீவுக்கூட்டம் | பிசுமார்க் தீவுக்கூட்டம் |
பரப்பளவு | 7,404 km2 (2,859 sq mi) |
நீளம் | 360 km (224 mi) |
அகலம் | 10 km (6 mi) - 40 km (25 mi) |
உயர்ந்த ஏற்றம் | 2,379 m (7,805 ft) |
உயர்ந்த புள்ளி | டரோன் குன்று |
நிர்வாகம் | |
பப்புவா நியூ கினி | |
மாகாணம் | நியூ அயர்லாந்து மாகாணம் |
பெரிய குடியிருப்பு | காவியெங் (மக். 10,600) |
மக்கள் | |
மக்கள்தொகை | 118,350[1] (2002) |
மூடு