பப்பா ராவல்
From Wikipedia, the free encyclopedia
பப்பா ராவல் (Bappa Rawal ) (பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டு) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மேவார் இராச்சியத்தின் அரசர் ஆவார். இவர் இராசபுத்திர குஹிலா வம்சத்தை நிறுவியவராக கருதப்படுகிறார்.
இந்தியாவின் மீதான அரேபிய படையெடுப்பை முறியடித்த பெருமை இவரையே சாரும். பல்வேறு வரலாற்றாசிரியர்கள் அவரை காலபோஜா, சிலாதித்யா மற்றும் குமனா உட்பட குஹிலா வம்சத்தின் பல்வேறு ஆட்சியாளர்களுடன் அடையாளம் கண்டுள்ளனர்.