பர்சா மாவட்டம்
நேபாளத்தின் மாதேஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பர்சா மாவட்டம் (Parsa District) (நேபாளி: पर्सा जिल्लाகேட்கⓘ, தெற்காசியாவில் நேபாளத்தின் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 2-இல் அமைந்துள்ளது. நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வீரகஞ்ச் நகரம் ஆகும்.
நாராயணி மண்டலத்தின் தராய் சமவெளியில் அமைந்த பர்சா மாவட்டத்தின் பரப்பளவு 1,353 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 6,01,017 ஆகும். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி (44%), நேபாள மொழி (45%), உருது மொழி (1%) மற்றும் பிற மொழிகள் (1%) பேசப்படுகிறது.