பிரை ஒட்டோ
From Wikipedia, the free encyclopedia
பிரை பால் ஓட்டோ (Frei Paul Otto) என்பவர் ஒரு செருமன் கட்டிடக்கலைஞரும் அமைப்புப் பொறியாளரும் ஆவார். இழுவை அமைப்புக்கள், மென்றகட்டு அமைப்புக்கள் உள்ளிட்ட இவரது இலகு கட்டமைப்புக்கள் பலரது கவனத்தை இவர்பால் ஈர்த்தன. 1972 இல் மியூனிச்சில் இடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக் விளையாட்டரங்கின் கூரையும் இவ்வாறான அமைப்பாகும்.
விரைவான உண்மைகள் பிரை ஒட்டோ, தனிப்பட்ட விவரங்கள் ...
பிரை ஒட்டோ | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | செருமன் |
பிறப்பு | ஃபிரை பால் ஒட்டோ (1925-05-31)31 மே 1925 சீக்மார், செருமனி |
இறப்பு | 9 மார்ச்சு 2015(2015-03-09) (அகவை 89) Warmbronn, Germany |
பணி |
மூடு
2006 க்கான பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான அரச நிறுவனத்தின் தங்கப்பதக்கம் ஓட்டோவுக்கு வழங்கப்பட்டது. ஓட்டோ இறப்பதற்குச் சற்று முன்னராக 2015 ஆம் ஆண்டில் கட்டிடக்கலைக்கான பிரிட்ஸ்கர் பரிசையும் இவர் பெற்றார்.