பெந்தோங் மாவட்டம்
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பெந்தோங் மாவட்டம் (ஆங்கிலம்: Bentong District; மலாய்: Daerah Bentong; சீனம்: 文冬县; ஜாவி: ﺑﻨﺘﻮڠ ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 80 கி.மீ. தூரத்தில் அமைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் பெந்தோங் மாவட்டம், நாடு ...
பெந்தோங் மாவட்டம் | |
---|---|
Daerah Bentong | |
பெந்தோங் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 3°25′N 101°55′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
மாவட்டம் | பெந்தோங் |
தொகுதி | பெந்தோங் |
உள்ளூராட்சி | பெந்தோங் நகராண்மைக் கழகம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சுல்கிப்லி அசீம்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,831.12 km2 (707.00 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,13,011 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 28xxx, 69xxx (கெந்திங் மலை) |
மலேசியத் தொலைபேசி | +6-09, +6-03-6 (கெந்திங் மலை) |
மலேசியப் போக்குவரத்து எண் | C |
மூடு
இந்த மாவட்டத்தின் மேற்கில் சிலாங்கூர் மாநிலம்; தெற்கில் நெகிரி செம்பிலான்; மாநிலம்; எல்லைகளாக உள்ளன. 1,831 கி.மீ² பரப்பளவில், கெந்திங் மலை மற்றும் புக்கிட் திங்கி மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியது. தித்திவாங்சா மலைத்தொடர் கிழக்குப் பகுதியில் படர்ந்து செல்கிறது.