பொகோட்டா
From Wikipedia, the free encyclopedia
பொகோட்டா (Bogotá) என்பது கொலொம்பியாவின் தலைநகரமும்[1], அந்நாட்டிலுள்ள அதிக மக்கள்தொகை கொண்ட நகரமுமாகும். பொகோட்டா டி. சி. என்னும் அதிகாரபூர்வமான பெயர் கொண்ட இந்நகரிம்ன் பழைய பெயர் சான்டா ஃபே டி பொகோட்டா. இதன் மக்கள்தொகை 7,033,914 (2007). பொகோட்டாவும் அதனைச் சூழவுள்ள, சியா, கோட்டா, சோவாச்சா, கஜிகா, லா கலேரா ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பெருநகரப் பகுதியும் 2007 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 8,244,980 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. சுக்ரே, குயிட்டோ ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மூன்றாவது அதிக உயரத்தில் அமைந்துள்ள முக்கியமான நகரமாகவும் இது விளங்குகிறது. கொலம்பியாவின் மையப்பகுதியில் இந்த நகரம் அமைந்துள்ளது. அண்டேஸ் மலைத்தொடரின் கிழக்கு கோர்டில்லெராவில் உள்ள அல்டிபிளானோ குண்டிபோயசென்ஸின் ஒரு பகுதியான பொகோட்டா பெரும் பசும்புல் தரை (savanna) என்னும் உயர் பீடபூமியில் அமைந்துள்ளது.
பொகோட்டா Bogotá | |
---|---|
குறிக்கோளுரை: Bogotá, 2600 metros más cerca de las estrellas Bogotá, 2600 மீட்டர்கள் விண்மீன்களுக்கு நெருக்கமாக | |
பொகோட்டாவைச் சுற்றிய பகுதிகள் | |
நாடு | கொலம்பியா |
பிரிவு | பொகோட்டா, டி.சி.* |
Foundation | ஆகஸ்ட் 6, 1538 |
அரசு | |
• மேயர் | சாமுவேல் மொரேனோ ரோஜாஸ், PDA |
பரப்பளவு | |
• நகரம் | 1,587 km2 (613 sq mi) |
• நிலம் | 1,732 km2 (668.7 sq mi) |
ஏற்றம் | 2,640 m (8,660 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 85,50,000நிலை 1 |
• அடர்த்தி | 3,914.0/km2 (10,137.1/sq mi) |
• பெருநகர் | 1,02,44,480 |
நேர வலயம் | ஒசநே-5 |
HDI (2006) | 0.830 – high |
இணையதளம் | City Official Site Mayor Official Site Bogotá Tourism |
*Bogotá is physically within and is the capital of Cundinamarca Department, but as the Capital District is treated as its own department. |