போயிங் 777
நீள்தொலைவு அகலவுரு இரட்டைப்பொறி தாரை வானூர்தி / From Wikipedia, the free encyclopedia
போயிங் 777 போயிங் வணிக வானூர்திகள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் நீள்தொலைவு இரட்டைப் பொறி அகலவுரு தாரை வானூர்தி குடும்பமாகும். இது பெரிய இரட்டைப்பொறி வானூர்திகளில் ஒன்றாகும். இதில் பொதுவாக 314 முதல் 451 வரையிலானப் பயணிகள் அமரக்கூடும்.5235 முதல் 9380 வரையிலான (கடல்வழி மைல்) தொலைவு செல்லக்கூடியது. பரவலாக "டிரிப்பிள் செவன்" என அழைக்கப்படும் இந்த வானூர்தியின்[3][4] குறிப்பிடத்தக்க பண்புக்கூறுகள்: மிகப்பெரும் விட்டமுடைய டர்போ பொறிகள், ஒவ்வொரு முதன்மை கீழறங்கு அமைப்பிலும் ஆறு சக்கரங்கள், வட்ட வடிவில் அமைந்த எரிபொருட் கிடங்கு, தகடு போன்ற வால் கூம்பு ஆகியன ஆகும்.எட்டு முதன்மை வான்சேவை நிறுவனங்களுடன் கலந்தாய்ந்து உருவாக்கப்பட்ட 777 போயிங்கின் 767க்கும் 747க்கும் இடையேயான கொள்ளளவு வேறுபாட்டை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே போயிங்கின் கம்பி வழிப் பறப்பு வானூர்தியாகும்; கணினி ஒத்திசைக்கும் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. மேலும் முழுமையும் கணினி-வடிவமைத்த வணிக வானூர்தியாகும்.
போயிங் 777 | |
---|---|
யுனைடெட் எயர்லைன்சின் போயிங் 777-200ER, பதிவு N797UA | |
வகை | அகல உரு தாரை வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | போயிங் வணிக வானூர்திகள் |
முதல் பயணம் | சூன் 12, 1994 |
அறிமுகம் | சூன் 7, 1995, யுனைடெட் எயர்லைன்சு |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | எமிரேட்சு யுனைடெட் எயர்லைன்சு எயர் பிரான்சு சிங்கப்பூர் வான்வழி |
உற்பத்தி | 1993–நடப்பு |
தயாரிப்பு எண்ணிக்கை | 1,212 சூன் 2014 வரை |
அலகு செலவு | 777-200ER: US$261.5 மில்லியன்[1] 777-200LR: US$296.0 மில்லியன்[1] 777-300ER: US$320.2 million[1] 777F: US$300.5 மில்லியன்[1] 777-8X: US$349.8 மில்லியன்[2] 777-9X: US$377.2 மில்லியன்[2] |
பின் வந்தது | போயிங் 777X |
1995இல் முதல் 777-200 வானூர்திகள் சேவை புரியத் தொடங்கின. அடுத்து சற்றே நீட்டித்த 777-300 (33.3 அடி அல்லது 10.1 மீ நீட்டிக்கப்பட்டது) 1998இல் சேவைக்கு வந்தது. நீள்தொலைவு செல்லக்கூடிய 777-300ER மற்றும் 777-200LR வேறுபாடுகள் முறையே 2004இலும் 2006இலும் சேவைக்கு வந்தன. சரக்குகளை ஏற்றிச் செல்லவல்ல 777F தனது முதல் பறப்பை 2008இல் நிகழ்த்தியது.