மங்கோலிய மக்கள்
நடு ஆசியாவின் ஒரு இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
மங்கோலிய மக்கள் (Mongolian people), அல்லது மங்கோலியர்கள் (Mongols, மொங்கோலியம்: Монголчууд, மங்கோல்சுட்) ஒரு கிழக்கு மற்றும் மத்திய ஆசிய இனக் குழு ஆவர். இவர்கள் மங்கோலியா மற்றும் சீனாவின் உள் மங்கோலியா ஆகியவற்றைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். இவர்கள் சீனா (எ.கா. சிஞ்சியாங்) மற்றும் உருசியாவின் பிற பகுதிகளில் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். மங்கோலியர்களின் புரியத் மற்றும் கல்மிக் பிரிவினர் உருசியாவின் புர்யாத்தியா மற்றும் கல்மிகியா பகுதிகளில் வாழ்கின்றனர்.
விரைவான உண்மைகள் Монголчуудமங்கோல்சூட்蒙古族ᠮᠣᠩᠭᠣᠯᠴᠤᠳ, மொத்த மக்கள்தொகை ...
Монголчууд மங்கோல்சூட் 蒙古族 ᠮᠣᠩᠭᠣᠯᠴᠤᠳ | |
---|---|
ஒரு மங்கோலிய புத்தத் துறவி | |
மொத்த மக்கள்தொகை | |
95 இலட்சம்–1 கோடி (2010) | |
சீனா (உள் மங்கோலியா) | 5,981,840 (2010) |
மங்கோலியா | 2,921,287[1] |
உருசியா | 647,417[2] |
தென் கொரியா | 34,000[3] |
ஐக்கிய அமெரிக்கா | 15,000–18,000[4] |
கிர்கிசுத்தான் | 12,000[5] |
செக் குடியரசு | 6,804[6] |
சப்பான் | 5,401[7] |
கனடா | 5,350[8] |
செருமனி | 3,852[7] |
ஐக்கிய இராச்சியம் | 3,701[7] |
பிரான்சு | 2,859[7] |
துருக்கி | 2,645[7] |
கசக்கஸ்தான் | 2,523[7] |
ஆஸ்திரியா | 1,955[9] |
மலேசியா | 1,500[7] |
மொழி(கள்) | |
மொங்கோலிய மொழி | |
சமயங்கள் | |
பெரும்பாலும் திபெத்தியப் பௌத்தம். சாமனிசமும் பின்பற்றப்படுகிறது. [10][11][12][13] சிறுபகுதியினர் சன்னி இசுலாம், கிழக்கு மரபுவழி திருச்சபை, தாவோயியம், போன் மதம் மற்றும் சீர்திருத்தத் திருச்சபையைப் பின்பற்றுகின்றனர். | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
முன்-மங்கோலியர்கள், கிதான் மக்கள் |
மூடு
மங்கோலியர்கள் ஒரு பொதுவான மரபுவழி மற்றும் இன அடையாளத்தினால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களது பழங்குடி மொழிகளானது ஒட்டுமொத்தமாக மங்கோலிய மொழியாக அறியப்படுகிறது. நவீனகால மங்கோலியர்களின் மூதாதையர்கள் முன்-மங்கோலியர்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.