மலேசியப் பொதுத் தேர்தல், 1978
From Wikipedia, the free encyclopedia
மலேசிய பொதுத் தேர்தல், 1978 (ஆங்கிலம்: 1978 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1978) என்பது 1978 சூலை மாதம் 8-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரையில், மலேசியாவில் நடைபெற்ற 5-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவின் அப்போதைய 154 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.
விரைவான உண்மைகள் மலேசிய மக்களவையின் 154 இடங்கள் அதிகபட்சமாக 78 தொகுதிகள் தேவைப்படுகிறது, பதிவு செய்தோர் ...
| |||||||||||||||||||||||||||||||||||||||||
மலேசிய மக்களவையின் 154 இடங்கள் அதிகபட்சமாக 78 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்தோர் | 5,059,689 | ||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 75.30% | ||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாளில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 276 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.
இந்தத் தேர்தலில் அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 154 இடங்களில் 130 இடங்களை வென்றது. பாரிசான் நேசனல் கூட்டணிக்கு கிடைத்த வாக்குப்பதிவு 57.23%.[1]