ரிச்சி பெனோட்
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
ரிச்சார்ட் "ரிச்சி" பெனோட் (Richard "Richie" Benaud, 6 அக்டோபர் 1930 – 10 ஏப்ரல் 2015) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். 1964 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் பிரபலமான ஒரு துடுப்பாட்ட வர்ணனையாளரானார்.
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
பெனாட் 1998 இல் | ||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரிச்சார்ட் பெனோட் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | (1930-10-06)6 அக்டோபர் 1930 பென்ரித், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 10 ஏப்ரல் 2015(2015-04-10) (அகவை 84) சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | ரிச்சி | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை கால்-சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பல்துறை, வர்ணனையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 190) | 25 சனவரி 1952 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 12 பெப்ரவரி 1964 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1948–1964 | நியூ சவுத் வேல்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, டிசம்பர் 22 2007 |
மூடு
தேர்வுத் துடுப்பாட்ட பல்துறை வீரரான ரிச்சி பெனோட், 1950களின் ஆரம்பத்தில் துடுப்பாட்ட அரங்கில் பின்தங்கியிருந்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியை 1960களின் ஆரம்பத்தில் மீண்டும் மேனிலைக்குக் கொண்டு வந்ததில் பெரும் பங்காற்றினார். 1958 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக 1964 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் பணியாற்றினார்.