அகமதாபாது
குசராத்து மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
அகமதாபாத் (குசராத்தி: અમદાવાદ, சிந்தி மொழி: ا د آ ڡڢګڪا, Ahmedabad) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும், இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமுமாகும். இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குசராத்து மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது. இது அகமதாபாத் மாவட்டத்தின் தலைநகரமாகும்.
அகமதாபாத் | |
---|---|
அம்தாவத் | |
ஆள்கூறுகள்: 23.0225°N 72.5714°E / 23.0225; 72.5714 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | அகமதாபாத் |
அமைப்பு |
|
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | அகமதாபாத் மாநகராட்சி |
• காவல் துறை ஆணையர் | ஆஷிஷ் பாட்டியா [1] |
பரப்பளவு | |
• மாநகரம் | 505.00 km2 (194.98 sq mi) |
• நகர்ப்புறம் | 1,866 km2 (720 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 1-ஆவது (குசராத்தில்) |
ஏற்றம் | 69.65 m (228.51 ft) |
மக்கள்தொகை (2011)[6] | |
• மாநகரம் | 56,33,927 |
• தரவரிசை | 5-ஆவது |
• அடர்த்தி | 11,000/km2 (29,000/sq mi) |
• நகர்ப்புறம் | 63,57,693 |
இனங்கள் | அகமதாபாத் அம்தாவாடி (குஜராத்தி) |
மொழி | |
• ஆட்சி | குஜராத்தி |
• கூடுதல் ஆட்சி மொழி | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 3800xx |
Area code | +9179xxxxxxxx |
வாகனப் பதிவு | GJ-01 (மேற்கு), GJ-27 (கிழக்கு), GJ-38 பாவ்லா (ஊரகம்)[8] |
பாலின விகிதம் | 1.11[9] ♂/♀ |
படிப்பறிவு விகிதம் | 89.62[6] |
பெருநகர மொ.உ.உ. | $70 billion |
இணையதளம் | ahmedabadcity |
மூலம்: இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.[10] |
இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குசராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குசராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர், குசராத்தின் தலைநகராக காந்தி நகர் ஏற்கப்பட்டது. அகமதாபாது இந்தியாவின் முதன்மையான தொழில் நகராக உள்ளது. இதன் மக்கள்தொகை விரைவாக உயர்ந்துவருகிறது. இதனால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக விண்ணைத்தொடும் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன.[11]