கிழக்கு ஆபிரிக்கா
ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
கிழக்கு ஆபிரிக்கா என்பது ஆபிரிக்கக் கண்டத்தின் கிழக்கு பிரதேசத்தில் உள்ள நாடுகளை கொண்ட பெருப் பிரதேசமாகும். ஐநாவின் துணைப் பிரதேசங்களின் வகையீட்டின் படி, 19 நாடுகள் இப்பிரதேசத்தில் அடங்குகிறது.
- கென்யா, தன்சானியா, மற்றும் உகாண்டா – மேலும் கிழக்கு ஆபிரிக்க சமுதாயத்தின் உறுப்பு நாடுகள்
- ஜிபூட்டி, எரித்திரியா, எத்தியோப்பியா, மற்றும் சோமாலியா – பொதுவாக ஆபிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும்
- மொசாம்பிக் மற்றும் மடகஸ்கார் – சிலவேளைகளில் தெற்கு ஆப்பிரிக்காவில் சேர்க்கப்படுகிறது.
- மலாவி, சாம்பியா, மற்றும் சிம்பாப்வே – சிலவேளைகளில் தெற்கு ஆப்பிரிக்காவில் சேர்க்கப்படுகிறது. முன்னாள் மத்திய ஆபிரிக்க கூட்டாட்சி
- புருண்டி மற்றும் ருவாண்டா – சிலவேலைகளில் மத்திய ஆபிரிக்காவில் சேர்க்கப்படுகிறது
- கொமரோஸ், மொரிசியஸ், மற்றும் சிஷெல்ஸ் – இந்து சமுத்திரத்திலுள்ள சிறிய தீவு நாடுகள்.
- ரீயூனியன் மற்றும் மயோட் – பிரெஞ்சு குடியேற்ற நாடுகள்
புவியியல் அமைவின் அடிப்படையில், சில சந்தர்ப்பங்களில் எகிப்து மற்றும் சூடான் இப்பிரதேசத்தில் சேர்ககப்படுகிறது.