வியட்நாமிய மக்கள்
From Wikipedia, the free encyclopedia
வியட்நாமிய மக்கள் (Vietnamese people) அல்லது கின் மக்கள் (Kinh people) (வியட்நாமியம்: người Việt அல்லது người Kinh) என்பவர்கள் இன்றைய வடக்கு வியட்நாமிலும் தென்சீனத்திலும் தோன்றிய தென்கிழக்காசிய இனக்குழு மக்கள் ஆவர். இவர்கள் 1999 கணக்கெடுப்பின்படி, வியட்நாமின் பெரும்பான்மை, அதாவது 86% அளவு மக்கள் ஆவர். அலுவல்முறையில் வியட்நாமில் வாழும் பிறரிடம் இருந்து வேறுபடுத்த இவர்கள் கின் மக்கள் எனப்படுகின்றனர். பண்டைய வியட்நாமியரின் மிகப் பழைய பதிவு இவர்களை இலாசு வியட் எனச் சுட்டுகிறது.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
~86 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
வியட்நாம் | 81,328,696 (2015)[1] |
ஐக்கிய அமெரிக்கா | 1,548,449 (2010)[2] |
கம்போடியா | 600,000[3] |
பிரான்சு | 350,000[4] |
கனடா | 220,425 (2011) |
ஆத்திரேலியா | 210,800 (2010)[5] |
சீனக் குடியரசு | 200,000 (2014)[6] |
செருமனி | 150,000[7] |
தென் கொரியா | 143,000 (2013)[8] |
சப்பான் | 135,657 (2014)[9] |
லாவோஸ் | 100,000 |
மலேசியா | 70,000[10] |
ஐக்கிய இராச்சியம் | 28,000 (born in Vietnam, 2014 ONS estimate)[11] "At least 55,000" (total community, 2007 estimate)[12] |
செக் குடியரசு | 60,931 (2010)[13] |
போலந்து | 50,000 |
உருசியா | 36,225[14] |
சீனா | 30,000 |
பிலிப்பீன்சு | 27,600 |
நோர்வே | 21,721(2014)[15] |
நெதர்லாந்து | 20,603(2014)[16] |
தாய்லாந்து | 10,000[17] |
டென்மார்க் | 14,669(2014)[18] |
சுவிட்சர்லாந்து | 14,496 |
கத்தார் | 8,000 (2008)[19] |
மக்காவு | 7,199 (2011)[20] |
பெல்ஜியம் | 7,151 (2001)[18] |
நியூசிலாந்து | 4,875 (2006)[21] |
பின்லாந்து | 4,645[22] |
உக்ரைன் | 3,850 (2001)[23] |
அங்கேரி | 3,019 (2011)[24] |
சிலவாக்கியா | 3,000[25] |
இத்தாலி | 3,000 |
மொழி(கள்) | |
வியட்நாமிய மொழி | |
சமயங்கள் | |
ஓங்கலாக வியட்நாமிய நாட்டுப்புற சமயம், மக்காயாண புத்தசமயம் இணைவோடு. சிறுபான்மையினர் கிறிஸ்தவர்கள் (பெரும்பகுதி உரோமன் கத்தோலிக்கர்களும் பிற குழுவினரும்.[26] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
|
இவர்கள் புவிப்பரவல்படியும் மொழியியலாகவும் தென்கிழக்காசியர்கள் என வழங்கப்பட்டாலும் நெடுங்கால சீனக் குடியேற்ற ஆட்சியால் இவர்களின் பண்பாடு கிழக்காசிய மக்களை ஒத்தே அமைகிறது. அதாவது, மிகவும் குறிப்பாக அவர்களின் வடக்கண்மை மக்களாகிய தென்சீன மக்களையும் பிற தென்சீனாவில் வாழும் பிற இனக்குழு மக்களையும் ஒத்தே அமைகிறது. வியட் எனும் சொல் பாக் வியட் என்பதன் சுருக்கமே. நாம் எனும் சொல்லின் பொருள் தெற்கு என்பதாகும்.