அடி அவாங்
From Wikipedia, the free encyclopedia
டான் ஸ்ரீ டத்தோ அப்துல் அடி அவாங் எனும் அடி அவாங் (ஆங்கிலம் Abdul Hadi bin Awang; மலாய்: Abdul Hadi bin Awang; சீனம்: 哈迪阿旺 சாவி: عبدالهادي بن اواڠ;); என்பவர் அக்டோபர் 1990 முதல் திராங்கானு, மாராங் மக்களவை தொகுதியின் (Marang Federal Constituency) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராக (Member of Parliament) சேவை செய்தவர். இவர் ஒரு மலேசிய அரசியல்வாதி மற்றும் மத போதகர் ஆவார்.[1]
عبدالهادي اواڠ | |
மலேசிய இசுலாமிய கட்சி 7-ஆவது தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 சூலை 2002 | |
மாராங் மக்களவை தொகுதி | |
பதவியில் 21 அக்டோபர் 1990 – 21 மார்ச் 2004 | |
பெரும்பான்மை | 161 (1990); 882 (1995); 12,700 (1999) |
ரூ ரெண்டாங் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 3 ஆகத்து 1986 – 9 மே 2018 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பெரும்பான்மை | 531 (1986); 853 (1990); 1,394 (1995); 3,843 (1999); 1,435 (2004); 2,686 (2008); 2,819 (2013) |
மாராங் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 22 ஏப்ரல் 1982 – 3 ஆகத்து 1986 | |
பெரும்பான்மை | 133 (1982) |
8-ஆவது மலேசிய எதிர்க்கட்சிகளின் தலைவர் | |
பதவியில் 23 சூலை 2002 – 21 மார்ச் 2004 | |
திராங்கானு மாநில முதல்வர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 டிசம்பர் 1999 | |
ஆட்சியாளர் | சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் |
தொகுதி | ரூ ரெண்டாங் சட்டமன்றத் தொகுதி |
மலேசிய இசுலாமிய கட்சி தலைவர் | |
பதவியில் 1990–2018 | |
மலேசியப் பிரதமரின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதர் | |
பதவியில் 2020–2022 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Abdul Hadi bin Awang 20 அக்டோபர் 1947 (1947-10-20) (அகவை 76) மாராங், திராங்கானு, மலாயா ஒன்றியம் (மலேசியா) |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி (PAS) |
பிற அரசியல் தொடர்புகள் | கூட்டணி (ALLIANCE) பாரிசான் (BN) அங்காத்தான் பெர்பாடுவான் உம்மா (APU) மாற்று பாரிசான் (BA) பாக்காத்தான் ராக்யாட் (PR) குகுசான் செசாத்திரா (GS) பெரிக்காத்தான் (PN) முபாகாட் நேசனல் (MN) |
துணைவர்(கள்) | சைனாப் அவாங் நிகா டாக்டர் நோர்சித்தா தாட் |
பிள்ளைகள் | 14 பேரப் பிள்ளைகள்: 30 |
முன்னாள் கல்லூரி | மதீனா இசுலாமிய பல்கலைக்கழகம் அல்-அசார் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | உலாமா ஆசிரியர் |
இணையத்தளம் | presiden |
இவர் மலேசிய இசுலாமிய கட்சியின் (Malaysian Islamic Party) (PAS) 7-ஆவது தலைவர்; 2 டிசம்பர் 1999 தொடங்கி 25 மார்ச் 2004 வரையில் திராங்கானு மாநிலத்தின் முதல்வர் (Menteri Besar of Terengganu) பதவி வகித்தவர்; 22 ஏப்ரல் 1982 தொடங்கி 3 ஆகத்து 1986 வரையில் திராங்கானு மாநில மாராங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் (Marang State Constituency); 1986 முதல் 2018 வரை திராங்கானு மாநில ரூ ரெண்டாங் சட்டமன்றத் தொகுதியின் (Ru Rendang State Constituency) உறுப்பினர் பதவிகளை வகித்தவர்.[2]