அட்லான்டா
சோர்சியா மாநிலத் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
அட்லான்டா (Atlanta) அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அமெரிக்காவில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி 9 ஆவது மிகப்பெரிய மாநகரம் ஆகும். இது ஃபுல்டன் மாவட்டத்தின் தலைநகரமாக உள்ளது, ஆனால் இந்த நகரின் ஒரு சிறிய பகுதி டிகேப் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. 2006ன் கணக்கெடுப்பின் படி அட்லான்டா நகரில் 486,411 மக்கள் வாழ்கிறார்கள்; அட்லான்டா புறநகரப் பகுதியையும் சேர்த்து மொத்தம் 5,138,223 மக்கள் வாழ்கிறார்கள்.
அட்லான்டா | |
---|---|
அடைபெயர்(கள்): ஹாட்லான்டா,[1] ATL,[2] The City in a Forest,[3] The A,[4] The Gate City.[5] | |
குறிக்கோளுரை: Resurgens (லத்தின் மொழியில் "மீண்டும் எழுவது") | |
ஃபுல்டன், டிகேப் மாவட்டங்களிலும் ஜோர்ஜியா மாநிலத்திலும் இருந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
மாநிலம் | ஜோர்ஜியா |
மாவட்டம் | ஃபுல்டன், டிகேப் |
டர்மினஸ் | 1837 |
மார்தாஸ்வில் | 1843 |
அட்லான்டா நகரம் | 1847 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | ஷர்லி ஃப்ராங்க்லின் (D) |
பரப்பளவு | |
• நகரம் | 132.4 sq mi (343.0 km2) |
• நிலம் | 131.8 sq mi (341.2 km2) |
• நீர் | 0.7 sq mi (1.8 km2) |
• நகர்ப்புறம் | 1,962.9 sq mi (5,084 km2) |
• மாநகரம் | 8,376 sq mi (21,690 km2) |
ஏற்றம் | 738−1,050 ft (225−320 m) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 4,86,411 |
• அடர்த்தி | 3,690.5/sq mi (1,220.5/km2) |
• நகர்ப்புறம் | 34,99,840 |
• பெருநகர் | 51,38,233 |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
Area code(s) | 404, 678, 770தொலைபேசி குறியீடு |
FIPS குறியீடு | 13-04000[6] |
GNIS அடையாளம் | 0351615[7]
|
விமான நிலையம் | ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம்- ATL |
இணையதளம் | http://www.atlantaga.gov/ |
ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் பல ஆண்டுகளாக முதன்மையாக விளங்கிய நகரங்களில் ஒன்றாக இருந்த அட்லான்டா, அண்மைக் காலத்தில் உலகளாவிய செல்வாக்கு பெற்ற நகரமாக மாறியுள்ளது. 2000 முதல் 2006 வரை அட்லான்டா மாநகரத்தின் மக்கள் தொகை 20.5% என்னும் அளவில் வளர்ந்தது; இதே காலப்பகுதியில் வேறு எந்தவொரு அமெரிக்க மாநகரமும் இந்த அளவு வளர்ச்சி பெறவில்லை. இந்த விரைவான மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக மாநகரப் பரப்பளவும் விரிவடைந்தது; அண்மைய ஆண்டுகளில் அட்லான்டா மாநகராட்சி இந்த பெருநகர விரிவை (urban sprawl) அடைந்திருந்த பொழுதும், இணக்கமான சுற்றுச்சூழலியல் கொள்கைகளும் கொண்டிருப்பதைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் பாராட்டுகின்றன[8].