அப்பாச்சி இணைய வழங்கி
From Wikipedia, the free encyclopedia
அப்பாச்சி இணைய வழங்கி (Apache HTTP Server) ஒரு கட்டற்ற இணைய வழங்கி மென்பொருளாகும். இது யுனிக்சு, லினிக்சு, விண்டோசு, நாவல் நெட்வெர் போன்ற பல்வேறு இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. அப்பாச்சி இணைய வழங்கியானது ஆரம்பத்தில் உலகளாவிய வலையமைப்பின் வளர்ச்சிக்குதவியதுடன் இன்றளவும் உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இணைய வழங்கி மென்பொருளாக உள்ளது. அத்துடன் இதுவே மற்றை இணைய வழங்கி மென்பொருட்களிற்கு மாதிரியாகத் திகழ்கின்றது. அப்பாச்சி மென்பொருட்களானது கட்டற்ற நிரலாலாளர்களால் விருத்தி செய்யப் படுகின்றது.
விரைவான உண்மைகள் வடிவமைப்பு, உருவாக்குனர் ...
வடிவமைப்பு | ராபட் மக்கூல் |
---|---|
உருவாக்குனர் | அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசன் |
அண்மை வெளியீடு | 2.2.9 / சூன் 13 2008 (2008-06-13), 5788 நாட்களுக்கு முன்னதாக |
மொழி | சி நிரலாக்கல் மொழி |
இயக்கு முறைமை | பல் இயங்குதளம் |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம் |
மென்பொருள் வகைமை | இணைய வழங்கி |
உரிமம் | அப்பாச்சி அனுமதி |
இணையத்தளம் | http://httpd.apache.org/ |
மூடு