ஆரன் சோர்க்கின்
அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
ஆரன் பெஞ்சமின் சோர்க்கின் (Aaron Benjamin Sorkin, பிறப்பு: சூன் 9, 1961[1]) என்பவர் அகாதமி, மற்றும் எம்மி விருதுகள் பெற்ற அமெரிக்கத் திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும், நாடக ஆசிரியரும் ஆவார். சிறந்த திரைக்கதைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு இவர் திரைக்கதை எழுதிய ’எ ஃபியூ குட் மென்’ (A FEW GOOD MEN-1989) திரைப்படம் முன்மொழியப்பட்டது.
ஆரன் சோர்க்கின் Aaron Sorkin | |
---|---|
2009 மே 18 இல் ஆரன் சோர்க்கின் | |
பிறப்பு | ஆரன் பெஞ்சமின் சோர்க்கின் சூன் 9, 1961 (1961-06-09) (அகவை 62) நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
தொழில் | திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நாடக ஆசிரியர் |
கல்வி நிலையம் | சிரக்கியூஸ் பல்கலைக்கழகம் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1984– இலிருந்து |
துணைவர் | யூலியா பிங்காம் (1996–2005; மணமுறிப்பு; 1 பிள்ளை) |
இவர் திரைக்கதைகளில் பெரும்பாலும் மதுபான அருந்தகத்தில் வரும் மனிதனாக இவர் இடம் பெறுவார். நடந்து கொண்டே பேசும் பல உரையாடல்கள் இவர் தம் கதைகளில் வரும். இவருடைய அரசியல் நோக்கும் எண்ணங்களின் வெளிப்பாடும் இவர் கதைகளில் அமைந்து இருக்கும். அரசு மற்றும் அரசு துறைகள் அவற்றை பற்றி வெகுவாக விமர்சிக்கும் வகையிலும் இவர் கதைக்களம் அமைந்து இருக்கும். மனோதத்துவ பகுப்பாய்வுகளில் திறமையாக எதிர்கொள்ளும் பாத்திரங்கள் இவர் கதைகளில் இடம் பெறும்.
இவர் படங்களில் பெரும்பாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் நிகழ்வுகள் கொண்டதாக இருக்கும். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இவர் தம் நாடகமாகிய "எ பியு குட் மென்" பின்னாளில் திரைப்படமாக வெளிவந்தது. அதில் வரும் ஒரு ராணுவ வழக்கறிஞர் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கடற்படை அதிகாரிகளுக்காக, அவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தரணியாக உள்ளது போன்ற கதைபோக்கு கொண்டதாக இருக்கும்