ஆஸ்திரேலியா நாட்டுப்பண்
From Wikipedia, the free encyclopedia
ஆஸ்திரேலியா நாட்டுப்பண் ( Advance Australia Fair ) என்பது ஆத்திரேலியா நாட்டின் நாட்டுப்பண் ஆகும். இதை எழுதி இசையமைத்தவர், ஸ்காட்லாந்தில் பிறந்த பள்ளி ஆசிரியர் பீட்டட் டோட்ஸ் மெக்கார்மிக் என்பவராவார். இவர் தன் 21 ஆம் வயதில் சிட்னிக்கு வந்தார். நேரம் கிடைக்கும் போது, உள்ளூர் கிருத்தவ தேவாலயங்களில் சமூகப் பணி செய்துவந்தார். தேவாலய இசைக்குழுவில் சேர்ந்தும் இருந்தார். ஒரு முறை மெக்கார்மிக் ஒரு கண்காட்சிக்கு சென்றபோது, அங்கே பல நாடுகளின் நாட்டுப்பண்கள் இசைக்கப்பட்டன. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கென தனியாக நாட்டுப்பண் இல்லாததைக் கண்டு வருந்தினார். பின்னர் பாடல் ஒன்றை அவரே எழுதி, அந்தப் பாடலுக்கு இசையும் அமைத்தார். 1878 ஆண்டு சிட்னியில் ஒரு விழாவில் முதன்முதலில் இந்தப் பாடல் பாடப்பட்டு பிரபலம் ஆனது. பின்னர் பாடல் சிறிது திருத்தப்பட்டு, 1901 இல் 10 ஆயிரம் பேர் பாடினார்கள். இந்தப் பாடலை இறைவன் அரசியைக் காப்பாராக என்னும் பாடலுக்கு பதிலாக நாட்டுப்பண்ணாக ஏற்பது குறித்து 1977 இல் பொதுமக்களிடம் பொதுக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு இந்தப்பாடலை ஆஸ்திரேலியாவின் நாட்டுப்பண்ணாக 1984 இல் அறிவிக்கப்பட்டது.
ஆத்திரேலியா தேசியம் கீதம் | |
இயற்றியவர் | பீட்டர் டேட்ஸ் மெக்கார்மிக், 1878 |
இசை | பீட்டர் டேட்ஸ் மெக்கார்மிக், 1878 |
சேர்க்கப்பட்டது | 1984 |
இசை மாதிரி | |
ஆத்திரேலியா நாட்டுப்பண் (கருவி இசை)
| |