இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி (Internet Protocol television, IPTV) அல்லது ஐபி டிவி வழமையான புவிப்புற, செய்மதி மற்றும் கம்பி வடத் தொலைக்காட்சி வடிவங்களில் அல்லாது இணையம் போன்ற சிப்ப மாற்றுப் பிணையம் வழியே இணைய நெறிமுறை கட்டமைப்பில் பரப்பப்படும் தொலைக்காட்சி சேவைகளாகும்.
இணைய நெறிமுறைத் தொலைக்காட்சியை மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கலாம்:
- நேரலைத் தொலைக்காட்சி, நடப்பு நிகழ்ச்சித் தொடர்பான இடைவினைகளுடனோ இல்லாமலோ;
- பிறிதொரு நேரத் தொலைக்காட்சி: விட்டதைப் பிடி தொலைக்காட்சி (சில நாட்களுக்கு அல்லது மணிகளுக்கு முந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மறு ஒளிபரப்பு), மீள்-பரப்பு தொலைக்காட்சி (தற்போதைய தொலைக்காட்சி நிகழ்ச்சியை முதலிலிருந்து மீள் ஒளிபரப்பு);
- கோரிய நேரத்து ஒளிதம் (VOD): தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லாது பிற ஒளிதங்களின் பட்டியல் மூலமாக பார்வையிடுதல்.
இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி இணையத் தொலைக்காட்சியிலிருந்து வேறுபட்டது; ஐரோப்பிய தொலைத்தொடர்பு சீர்தர நிறுவனம் போன்றவற்றால் வரையறுக்கப்பட்டு தொலைதொடர்பு பிணையங்களில் அதிவிரைவு அணுக்க அலைவரிசைகள் மூலம் பயனரின் வீட்டிற்கு தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி அல்லது பிற பயனர் இடத்து கருவிகளுக்கு பரப்பப்படுகிறது.
இந்தியாவில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர்டெல் மற்றும் ரிலையன்சு தொலைதொடர்பு நிறுவனங்கள் நாட்டின் பெருநகரங்களில் இச்சேவையை வழங்கி வருகின்றன.