இந்துப்பு
From Wikipedia, the free encyclopedia
இந்துப்பு (ஒலிப்புⓘ) அல்லது இமயமலை உப்பு (Himalayan salt) என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா மற்றும் பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வுப்பை தமிழில் இந்துப்பு என்பர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உப்பு மலைத்தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இமயமலைலிருந்து 310 கி மீ தொலவிலும், லாகூரிலிருந்து 260 கி மீ தொலைவிலும், அமிர்தசரசிலிருந்து 298 கி மீ தொலைவிலும் உள்ள உப்பு மலைத் தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.[1]
இந்தியாவில் இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் இந்துப்பு, சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.