இயற்பிய வேதியியல்
From Wikipedia, the free encyclopedia
இயற்பிய வேதியியல் (Physical chemistry) என்பது வேதிப்பொருட்களில் காணப்படும் பேரளவு துகள்கள், நுண்துகள், அணுக்கள் மற்றும் துகள்மங்கள் போன்றவற்றையும் அவை சார்ந்த வேதியியல் நிகழ்வுகளையும் இயற்பியல் விதிகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்கின்ற ஒரு துறையாகும். இயக்கம், ஆற்றல், விசை, நேரம், வெப்ப இயக்கவியல், இயங்கியல், குவாண்டம் வேதியியல், புள்ளியியல் இயக்கவியல் போன்றவை இயற்பியல் கோட்பாடுகளில் அடங்கும். ஆற்றல் அழிவின்மை விதியை வெளியிட்ட அண்டோயின் இலவாய்சியரின் சோதனைகளுக்குப் பின்னர் வேதியியல் என்பது கவனமான அளவீடுகள் மற்றும் வேதியியல் நிகழ்வுகளின் அடிப்படையிலான அளவீடுகள் ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஒரு அறிவியல் பிரிவு என்ற நோக்கத்துடன் பயணித்தது. வேதியியலின் வரலாறு வெப்ப இயக்கவியலின் வரலாற்றுடன், குறிப்பாக விலார்டு கிப்சின் ஆய்வுகளுடன் பிணைந்தே காணப்படுகிறது[1]. இயற்பிய வேதியியலை பௌதீக வேதியியல் என்ற பெயராலும் அழைப்பார்கள்.
இயற்பிய வேதியியலானது, வேதியியற்பியலைப் போலன்றி, எப்போதும் இல்லாவிட்டாலும் பெரும்பாலும், கட்புலனாகத்தக்க மூலக்கூற்று அறிவியல் அல்லது மீயளவு மூலக்கூற்று அறிவியலுக்கு முன்னுரிமை அளிக்கின்ற ஒரு துறையாகும். இயற்பிய வேதியியலுக்கு அடிப்படையாக உள்ள பெரும்பாலான கொள்கைகள், மூலக்கூறு அல்லது அணு சார்ந்தவற்றுடன் மட்டுமின்றிப் பேரளவு சார்ந்த கருத்துருக்களுடன் தொடர்புடையவையாக உள்ளன. கூழ்மம், வேதிச் சமநிலை போன்றவை இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இயற்பிய வேதியியல் சமாளிக்க போராடும் சில இயற்பியல் கோட்பாடுகள் இங்கு தரப்படுகின்றன.
- . மூலக்கூற்றிடை விசைகள் பொருட்களின் இயற்பியல் பண்புகள் மீது செயல்படுகின்றன (நெகிழ்வு தன்மை, இழுவிசை வலிமை, நீர்மங்களில் பரப்பு இழுவிசை போன்றவை சில இயற்பியற் பண்புகளாகும்).
- .வேதி வினைவேகவியல் என அழைக்கப்படும் வினை இயக்கவியலானது வேதி வினைகளின் வேகத்தைப் பாதிக்கக்கூடியதாக உள்ளது.
- .அயனிகளை அடையாளம் காணுதல் மற்றும் பொருட்களின் மின்கடத்தல் போன்ற நடவடிக்கைகள்.
- .செல் படலங்களின் மின்வேதியியல் மற்றும் புறப்பரப்பு வேதியியல் [2].
- .பொருட்களுக்கிடையில் வெப்ப இயக்கவியல் என அழைக்கப்படும் வேலை மற்றும் வெப்பம் ஆகியனவற்றுக்கு இடையிலான இடைவினைகள்
- .வெப்பவேதியியல் என்றழைக்கப்படும் வேதியியல் அமைப்புக்கும் அதன் சூழலுக்கும் இடையிலான வெப்பநிலை மாற்றம். பொருட்களின் நிலை மாற்றம் அல்லது வேதியியல் வினையின் பொது இம்மாற்றம் நிகழ்கின்றது.
- .கரைசலில் காணப்படும் இனங்களின் தொகைசார் பண்புகளை ஆய்வு செய்தல்
- . .நிலைகளின் எண்ணிக்கை, உட்கூறுகளின் எண்ணிக்கை மற்றும் சுதந்திரத்தின் அளவு (அல்லது மாறுபாடு) ஆகியவை கட்ட விதிகளின் உதவியுடன் ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பு..
- .மின் வேதியியல் கலன்களின் வினைகள்.