இஷாந்த் ஷர்மா
இந்தியத் துடுப்பாட்டக்காரர் / From Wikipedia, the free encyclopedia
இசாந்த் ஷர்மா (Ishant Sharma; (ஒலிப்புⓘ; (பிறப்பு: செப்டம்பர் 2 1988) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய அனைத்து வடிவ துடுப்பாட்டங்களிலும் விளையாடி வருகிறார். இவர் ஒரு வலதுகை மித விரைவு வீச்சாளர் ஆவார்.[1] ஜவகல் ஸ்ரீநாத் திற்கு அடுத்தபடியாக அதிவேகமான பந்தினை வீசியுள்ளார் (ஸ்ரீநாத்தின் சாதனை: 1999 உலகக்கோப்பையின் போது மணிக்கு 154.5 கி.மீ., இசாந்தின் வேகம்: 2008 ஆஸ்திரேலியா அடிலெய்டில் 152.6 km/h). இவர் 1.93 மீ (6.3 அடி) உயரம் கொண்டவர் ஆவார்.[2][3][4]
2012 இல் ஷர்மா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | இஷாந்த் விஜய் சர்மா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 2 செப்டம்பர் 1988 (1988-09-02) (அகவை 35) தில்லி, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.93 m (6 அடி 4 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 258) | 25 மே 2007 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 24 சனவரி 2018 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 169) | 29 சூன் 2007 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 17 சனவரி 2016 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 1 ( முன்னதாக 29) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 21) | 1 பெப்ரவரி 2008 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 10 அக்டோபர் 2013 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006/07–தற்போதுவரை | புது தில்லி துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 29) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2012 | டெக்கான் சார்ஜர்ஸ் (squad no. 1) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–2015 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 1) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 1) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | கிங்சு இலெவன் பஞ்சாபு (squad no. 29) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | சசெக்ஸ் மாகாணத் துடுப்பாட்ட அணி (squad no. 97) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 19 மே 2018 |
2006–2007 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு பெற்றார்.[5] அப்போது இவரின் வயது 18. இவரின் உடல்வாகினால் இவர் லம்பு எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.[6][7]. 2001 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டங்களில் மிக இளம்வயதில் 100 இலக்குகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 2013 ஆம் ஆண்டில் தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 வது இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் விரைவாக 100 இலக்குகளை வீழ்த்திய இந்தியர்களின் வரிசையில் ஐந்தாவது இடம்பிடித்தார்.[8] 2011 பொக்சிங் நாள் அன்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் ரிக்கி பாண்டிங்கிற்கு மணிக்கு 152.2 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசினார். சிறந்த இந்தியப் பந்துவீச்சாளர்களில் விரைவு வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.