இஸ்லாமாபாத்
பாகிஸ்தானின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
இஸ்லாமாபாத் (Islamabad) பாகிஸ்தானின் தலைநகரமாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் தலைநகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1960 களில் இந்நகரம் கட்டப்பட்டு கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக்கப்பட்டது. 1999ல் இந் நகரத்தின் மக்கள் தொகை 1,018,000 ஆகும். இந்நகரத்தின் பரப்பளவு 406 சதுர கிலோமீட்டர் ஆகும். இஸ்லாமாபாத் அதன் உயர் வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு மற்றும் பசுமைக்கு பெயர் பெற்றது.[7] 2017 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி 1,014,825 மக்கட் தொகை கொண்ட இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் 9 வது பெரிய நகரமாகும். மேலும் பெரிய இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி பெருநகரப் பகுதி நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்த பெருநகர்ப் பகுதி நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கட் தொகையைக் கொண்டது.[8]
இஸ்லாமாபாத்
اسلام آباد | |
---|---|
ஆள்கூறுகள்: 33°41′35″N 73°03′50″E | |
Country | பாக்கித்தான் |
Territory | இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம் |
Founded | 1960 |
Constituencies | NA-52, NA 53, NA-54[1] |
அரசு | |
• வகை | Parliamentary democratic republic |
• Governing body | ICT Administration, Islamabad Metropolitan Corporation and Capital Development Authority (CDA) |
• Chief Commissioner | Amer Ali Ahmed |
• Chairman CDA | Hamza Shafaat |
• Mayor | Sheikh Ansar Aziz[2] |
பரப்பளவு | |
• தலைநகரம் | 906.5 km2 (350.0 sq mi) |
• நிலம் | 897.7 km2 (346.6 sq mi) |
• நீர் | 8.8 km2 (3.4 sq mi) 0.97% |
• நகர்ப்புறம் | 220.15 km2 (85.00 sq mi) |
• நாட்டுப்புறம் | 466.20 km2 (180.00 sq mi) |
• Parks | 220.15 km2 (85.00 sq mi) |
உயர் புள்ளி | 620 m (2,000 ft) |
தாழ் புள்ளி | 490 m (1,610 ft) |
மக்கள்தொகை (2017 Census)[4] | |
• தலைநகரம் | 10,14,825 |
• அடர்த்தி | 2,089/km2 (5,410/sq mi) |
• நகர்ப்புறம் | 10,14,825 |
• நகர்ப்புற அடர்த்தி | 4,609/km2 (11,940/sq mi) |
• நாட்டுப்புறம் | 9,91,747 |
• பெருநகர் | 4 million |
[5] | |
இனம் | Islamabadi or Islamabadis |
நேர வலயம் | ஒசநே+5 (PKT/YEKT) |
Postcode | 44000 |
Area code | 051 |
HDI | 0.875 (data for 2014–2015) [6] |
HDI Category | very high |
Notable sports teams | Islamabad United, Islamabad Jinns |
இணையதளம் | www |
நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள போத்தோஹர் பீடபூமியில், ராவல்பிண்டி மாவட்டத்திற்கும், வடக்கே மார்கல்லா ஹில்ஸ் தேசிய பூங்காவிற்கும் இடையில் இஸ்லாமாபாத் அமைந்துள்ளது. இப்பகுதி வரலாற்று ரீதியாக பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மார்கல்லா பாஸ் இரு இடங்களுக்கும் இடையிலான நுழைவாயிலாக செயல்படுகிறது.[9]
கிரேக்க கட்டிடக் கலைஞர் கான்ஸ்டான்டினோஸ் அப்போஸ்டலோ டோக்ஸியாடிஸ் இந்த நகரத்தை வடிவமைத்தார். நகரம் நிர்வாக, இராஜதந்திர இடங்கள், குடியிருப்புப் பகுதிகள், கல்வித் துறைகள், தொழில்துறை துறைகள், வணிகப் பகுதிகள் மற்றும் கிராமப்புற மற்றும் பசுமைப் பகுதிகள் உட்பட எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றது. மார்கல்லா ஹில்ஸ் தேசிய பூங்கா மற்றும் ஷகார்பரியன் பூங்கா உள்ளிட்ட பல பூங்காக்கள் மற்றும் காடுகள் இந்த நகரத்தில் அமையப்பெற்றுள்ளன. இஸ்லாமாபாத் நகரம் தெற்காசியாவின் மிகப்பெரிய மசூதியான பைசால் மசூதி உட்பட பல அடையாளங்களை கொண்டுள்ளது. பாகிஸ்தானின் தேசிய நினைவுச்சின்னம் மற்றும் ஜனநாயக சதுக்கம் ஆகிய அடையாளச் சின்னங்களும் இங்கு அமைந்துள்ளன.