எடிசன், நியூ ஜெர்சி
நியூஜெர்சியின் நகரியம் / From Wikipedia, the free encyclopedia
எடிசன் நகரியம் (Edison Township, பொதுவழக்கில் எடிசன்) நியூ ஜெர்சியின் மிடில்செக்ஸ் கௌன்டியில் உள்ள ஓர் நகரியம் ஆகும். இங்கு கணிசமான இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வசிக்கின்றனர். இப்போதைய எடிசன் நகரியம் முன்னதாக ராரிடன் நகரியம் என 1870ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று நியூ ஜெர்சி சட்டமன்றத்தின் ஓர் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரியத்தின் மென்லோ பூங்கா பகுதியில் தமது ஆய்வகத்தை வைத்திருந்த தாமஸ் ஆல்வா எடிசனின் [8] நினைவாக நவம்பர் 10,1954 அன்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டது. 2010 அமெரிக்க கணக்கெடுப்பின்படி எடிசனின் மக்கள்தொகை 99,967,[4] ஆகும். இது நியூ செர்சியின் ஐந்தாவது பெரிய நகராட்சியாக விளங்குகிறது.[9]
எடிசன் நகரியம், நியூஜெர்சி | |
---|---|
நகரியம் | |
அடைபெயர்(கள்): "நவீன உலகின் பிறப்பிடம்" | |
குறிக்கோளுரை: "ஒளி பரவுக Let There Be Light" | |
மிடில்செக்ஸ் கௌன்டியில் எடிசன் நகரியத்தின் வரைபடம். | |
மக்கள்தொகை ஆணையத்தின் வரைபடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
அமெரிக்க மாநிலம் | நியூ ஜெர்சி |
கௌன்டி | மிடில்செக்ஸ் |
குடியமர்வு | 1651 |
நகர்மன்ற நிறுவல் | மார்ச் 17, 1870 (ராரிடன் நகரியமாக) |
அரசு | |
• வகை | பாக்னர் சட்டம் மேயர்-நகர்மன்றம் |
• மேயர் | அன்டோரியா "டோனி" ரிசிக்ளியனோ (பதவி முடிவு - 2013)[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 79.5 km2 (30.69 sq mi) |
• நிலம் | 78.0 km2 (30.12 sq mi) |
• நீர் | 1.5 km2 (0.57 sq mi) 1.86% |
ஏற்றம் | 35 m (115 ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பில்)[4] | |
• மொத்தம் | 99,967 |
• அடர்த்தி | 1,300/km2 (3,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு (EST)) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு (EDT)) |
ZIP codes | 08817, 08818, 08819, 08820, 08837, 08899 |
Area code(s) | 732/848, 908தொலைபேசி குறியீடு |
FIPS | 34-20230[5][6] |
GNIS feature ID | 0882166[7] |
இணையதளம் | www.edisonnj.org |
2009 மதிப்பீட்டொன்றின்படி எடிசன் அமெரிக்காவின் சிறார் வளர்ப்பிற்கு சிறந்த பத்து இடங்களில் ஒன்றாக கருதபடுகிறது. இது குறைந்த குற்றங்கள், திறமிக்க பள்ளிகள் மற்றும் பசுமையான திறந்தவெளிகள், மனமகிழ் வசதிகள் இவற்றைக் கணக்கில்கொண்டு தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.[10]