எட்வார்டு சார்லசு பிக்கரிங்
அமெரிக்க வானியலாளர் / From Wikipedia, the free encyclopedia
எட்வார்டு சார்லசு பிக்கரிங் (Edward Charles Pickering) (யூலை 19, 1846 – பெப்ரவரி 3, 1919), ஒரு அமெரிக்க வானியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்.[1] இவர் இன்னொரு வானியலாளரான வில்லியம் என்றி பிக்கெரிங் என்பவரின் தமையன். கார்ல் வோகல் என்பவருடன் இணைந்து பிக்கரிங், நிறமாலை இரும விண்மீன்களை முதல்முதலாகக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியச் செயல்முறைகளின் கூறுகள் (Elements of Physical Manipulations) (2 தொகுதி, 1873–76) என்னும் நூலை எழுதியுள்ளார்.
விரைவான உண்மைகள் எட்வார்டு சார்லசு பிக்கரிங், பிறப்பு ...
எட்வார்டு சார்லசு பிக்கரிங் | |
---|---|
பிறப்பு | (1846-07-19)சூலை 19, 1846 பொசுட்டன், மசச்சூசெட்சு |
இறப்பு | பெப்ரவரி 3, 1919(1919-02-03) (அகவை 72) கேம்பிரிட்சு, மசச்சூசெட்சு |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
அறியப்படுவது | நிறமாலை இரும விண்மீன்கள் |
விருதுகள் | என்றி டிரேப்பர் பதக்கம் (1888) வால்சு பரிசு (1888) புரூசு பதக்கம் (1908) அரச வானியற் கழகத்தின் தங்கப் பதக்கம் (1886ம் 1901ம்.) |
மூடு