ஒன்கே மக்கள்
இந்தியப் பழங்குடிகள் / From Wikipedia, the free encyclopedia
ஒன்கே மக்கள் (Onge) எனப்படுவோர் அந்தமான் தீவுகளில் வசிக்கும் அந்தமான் மக்களின் ஒரு குறிப்பிட்ட பழங்குடிகள் ஆவர். இவர்கள் "நெகிரிட்டோக்கள்" எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பொதுவாக சிறிய அந்தமான் தீவு மற்றும் அதனைச் சூழவுள்ள தீவுத் திடல்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன் ரட்லண்ட் தீவு மற்றும் தெற்கு அந்தமான் தீவின் தென்முனையின் பகுதிகளிலும் சில கூடாரங்களில் வசிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடியே தமது உணவைத் தேடுகின்றனர்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
ஒன்கே பழங்குடி மக்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(95 (அண்.)[1]) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியாவின் சிறிய அந்தமான் தீவின் மேற்குப் பகுதி | |
மொழி(கள்) | |
ஒன்கே | |
சமயங்கள் | |
பழங்குடியினரின் பண்பாடு, விவரம் தெரியப்படவில்லை | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஏனைய பழங்குடிகள் அந்தமான் ஜாரவா பழங்குடியினர், அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள் மற்றும் ஷோம்பென் மக்கள். |
மூடு