ஒலாஃப் சோல்த்சு
From Wikipedia, the free encyclopedia
ஒலாஃப் சோல்த்சு (Olaf Scholz; இடாய்ச்சு: [ˈoːlaf ˈʃɔlts] ( கேட்க); பிறப்பு: 14 சூன் 1958) செருமானிய அரசியல்வாதியும், 2021 திசம்பர் 8 முதல் செருமானிய அரசுத்தலைவரும் ஆவார். சமூக சனநாயகக் கட்சியின் உறுப்பினரான இவர் முன்னதாக அங்கெலா மேர்க்கெலின் அரசில் துணை அரசுத்தலைவராகவும், நிதி அமைச்சராகவும் 2018 முதல் 2021 வரை பணியாற்றியிருந்தார். இவர் 2011 முதல் 2018 வரை ஆம்பர்கு மாநில முதல்வராகவும் 2009 முதல் 2019 வரை சமூக சனநாயகக் கட்சியின் த்ணைத் தலைவராகவும் பதவியில் இருந்தார். 2021 இல் இவர் சமூக சனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி, சுயாதீன சனநாயகக் கட்சி ஆகியவற்றின் கூட்டணியில் ஆட்சி அமைத்தார்.
ஒலாஃப் சோல்த்சு Olaf Scholz | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
செப்டம்பர் 2021 இல் சோல்த்சு | |||||||||||||||||||||||||
செருமனியின் அரசுத்தலைவர் | |||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||
பதவியில் 8 திசம்பர் 2021 | |||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | பிராங் வால்டர் சென்மர் | ||||||||||||||||||||||||
துணை அரசுத்தலைவர் | இராபர்ட்டு ஆபெக் | ||||||||||||||||||||||||
முன்னையவர் | அங்கெலா மேர்க்கெல் | ||||||||||||||||||||||||
செருமனியின் துணை அரசுத்தலைவர் | |||||||||||||||||||||||||
பதவியில் 14 மார்ச் 2018 – 8 திசம்பர் 2021 | |||||||||||||||||||||||||
அதிபர் | அங்கெலா மேர்க்கெல் | ||||||||||||||||||||||||
முன்னையவர் | சிக்மார் கேப்ரியல் | ||||||||||||||||||||||||
பின்னவர் | இராபர்ட்டு ஆபெக் | ||||||||||||||||||||||||
நிதி அமைச்சர் | |||||||||||||||||||||||||
பதவியில் 14 மார்ச் 2018 – 8 திசம்பர் 2021 | |||||||||||||||||||||||||
அதிபர் | அங்கெலா மேர்க்கெல் | ||||||||||||||||||||||||
முன்னையவர் | ஊல்ஃப்காங் சாபில் | ||||||||||||||||||||||||
பின்னவர் | கிறித்தியான் லின்ட்னர் | ||||||||||||||||||||||||
ஆம்பர்கு மாநில முதல்வர் | |||||||||||||||||||||||||
பதவியில் 7 மார்ச் 2011 – 13 மார்ச் 2018 | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||
பிறப்பு | 14 சூன் 1958 (1958-06-14) (அகவை 65) ஒசுனாபுருக், மேற்கு செருமனி | ||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | சமூக சனநாயகக் கட்சி | ||||||||||||||||||||||||
துணைவர் | பிரிட்டா எர்னெசுட்டு (தி. 1998) | ||||||||||||||||||||||||
வாழிடம் | போட்சுடாம் | ||||||||||||||||||||||||
முன்னாள் கல்லூரி | ஹம்பர்கு பல்கலைக்கழகம் | ||||||||||||||||||||||||
வேலை |
| ||||||||||||||||||||||||
கையெழுத்து | |||||||||||||||||||||||||
இணையத்தளம் | olaf-scholz | ||||||||||||||||||||||||
சோல்த்சு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு சட்டத்தில் திறமை பெற்ற வழக்கறிஞர்.[1] இவர் 1970-களில் சமூக சனநாயகக் கட்சியின் உறுப்பினரானார்.[2] 1998 முதல் 2011 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[3] 2002 இல் கட்சிப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, 2001 இல் ஆம்பர்கு அரசில் பணியாற்றினார். அரசுத்தலைவர் கெர்ஃகாத் சுரோடரின் அரசில் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர் 2007 இல் மேர்க்கெல் அரசில் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2009 தேர்தலை அடுத்து சமூக சனநாயகக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பிறகு, இவர் ஆம்பர்கில் கட்சித் தலைவராகவும், பின்னர் பின்னர் கட்சியின் துணைத் தலைவராகவும் ஆனார். 2011 ஆம்பர்க் மாநிலத் தேர்தலில் அவர் தனது கட்சியை வெற்றியடையச் செய்து, 2018 வரை மாநில முதல்வராகப் பணியாற்றினார்.[4]
2018 இல் இவரது கட்சி நான்காவது மேர்க்கெல் அரசாங்கத்தில் நுழைந்த பிறகு, சோல்த்சு நிதி அமைச்சராகவும், செருமனியின் துணை அரசுத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.[5] 2020-இல், 2021 கூட்டாட்சித் தேர்தலுக்கான அரசுத்தலைவர் வேட்பாளராகக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டார்.[6] இவரது கட்சி நாடாளுமன்றத்தில் 206 இடங்களை (25.8%) வென்று,[7] பசுமைவாதிகளுடனும் சுயாதீன சனநாயகக் கட்சியுடனும் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியது.[8] 2021 திசம்பர் 8 அன்று, இவர் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[9]