கணவாய்த் தோடு
செபிடே குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களிலும் காணப்படும் உள்ளமைப்பு / From Wikipedia, the free encyclopedia
கணவாய்த் தோடு (Cuttlebone) என்பது கடினமான ஒரு உள் உறுப்பு ஆகும். இது தலைக்காலிகளான தோட்டுக்கணவாய் என்று அழைக்கப்படும் செபிடே குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களிலும் காணப்படுகிறது.
கணவாய்த் தோடானது முதன்மையாக அரகோனைட்டால் ஆனது. இது கணவாய்கள் அடி ஆழத்துக்குச் செல்லவும் மேலே வரவுமான மிதவை நிலையை கட்டுப்படுத்த உதவும் வாயு நிரப்பப்பட்ட அறை ஆகும். இந்த மிகவும் மாறுபட்ட அறையானது கணவாயின் வயிற்றுப்புறத்தில் உள்ளது. [2] கணவாய்த் தோடானது எலும்பின் நுண்ணிய அமைப்பாக பல நுண்ணறைகளைக் கொண்ட கொள்களன்களக் கொண்டுள்ளது. நீரின் ஆழத்துக்குச் செல்ல விரும்பினால் நுண்ணறைகளில் காற்றுக்கு பதில் நிரை பரிமாற்றம் செய்து எடையை ஏற்றி உள்ளே செல்லும். அதேபோல மேலே வர விரும்பினால் நீரை வெளியேற்றி எடையைக் குறைத்துக் கொண்டு மேலெழும்பும்.
இனங்களைப் பொறுத்து, கணவாய்த் தோடுகள் 200 முதல் 600 மீட்டர்கள் (660 முதல் 1,970 அடி) ஆழம் வரை நொறுங்காமல் தாங்கும். இந்த ஆழம் தாங்கும் தன்மை காரணமாக, பெரும்பாலான கணவாய் மீன்கள் கண்ட திட்டின் ஆழ்கடல் நீரின் கடல் தளத்தில் வாழ்கின்றன.
மிகப்பெரிய கணவாய்த் தொடு செபியா அபாமா என்ற மிகப்பெரிய ஆத்திரேலிய கணவாய்க்கு உள்ளது. இது மேற்பரப்புக்கும் அதிகபட்சம் 100 மீட்டர் ஆழத்திற்கும் இடையில் வாழ்கிறது.