![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/13/Coveting_the_Black_Stone.jpg/640px-Coveting_the_Black_Stone.jpg&w=640&q=50)
கறுப்புக் கல்
From Wikipedia, the free encyclopedia
கறுப்புக் கல் (Black Stone, Hajarul Aswad, அரபு மொழி: الحجر الأسود) என்பது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பெரிய பள்ளிவாசல் நடுவில் அமைந்துள்ள காபா எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி ஆதம், ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/13/Coveting_the_Black_Stone.jpg/640px-Coveting_the_Black_Stone.jpg)
இந்தக் கல் முஹம்மது நபியின்) பிறப்புக்கு முன்னே, இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபியினால் கிபி 605 ஆம் ஆண்டு காபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.[2]
முஹம்மது நபி வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் காபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும் போது இக்கல்லை போட்டியிட்டு ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள்.[3][4]