காலி
இலங்கையின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
காலி இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஒரு நகரம். இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் எட்டு மாகாணங்களுள் ஒன்றான தென் மாகாணத்தின் தலைநகரமும் இதுவே. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. 2004 ல் ஏற்பட்ட சுனாமியினால் இந்த நகரம் கடுமையாகப்பாதிக்கப்பட்டது. சர்வதேச துடுப்பாட்ட திடல் ஒன்றையும் இந்த நகரம் கொண்டுள்ளது. 2004 ஆழிப்பேரலை தாக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த திடல் புணரமைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.