குல்ஹர் (தேநீர் கோப்பை)
From Wikipedia, the free encyclopedia
ஒரு குல்ஹர் ( இந்தி : कुल्हड़ மற்றும் உருது: کلہڑ) அல்லது குல்ஹாத், சில சமயங்களில் ஷிகோரா என்று அழைக்கப்படுகிறது, இது தெற்காசியாவிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய கைப்பிடியில்லாத மட்பாண்டக் கோப்பை ஆகும். இது பொதுவாக அலங்கரிக்கப்படாத மற்றும் மெருகூட்டப்படாமல் தயாரிக்கபடுகிறது. மேலும் இது பயன்படுத்திய பிறகு எறிந்துவிடலாம் . குல்ஹார்கள் மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை.
இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள கடைவீதிகளிலும் , உணவுக் கூடங்களிலும் பாரம்பரியமாக தேநீர் போன்ற சூடான பானங்களை குஹ்லர்களில் வழங்குகின்றனர் , இதில் பானத்தை நிரப்பி "மண்ணின் நறுமணத்துடன்" பருக்குவது பெரும்பாலும் கவர்ச்சிகரமானதாகக் கருதப்படுகிறது. தயிர், சர்க்கரையுடன் சூடான பால் மற்றும் குல்ஃபி (பாரம்பரிய ஐஸ்கிரீம்) போன்ற சில பிராந்திய இனிப்புகளும் குல்ஹர்களில் பரிமாறப்படுகின்றன. குல்ஹார்கள் படிப்படியாக பாலிஸ்டிரீன் மற்றும் மெழுகு பூசப்பட்ட காகிதக் கோப்பைகளால் மாற்றப்பட்டுள்ளன, ஏனெனில் காலபோக்கில் இவைகளை மொத்தமாக எடுத்துச் செல்வதற்கு இலகுவானது மற்றும் மலிவானது.