குழிப்பந்தாட்டம்
From Wikipedia, the free encyclopedia
குழிப்பந்தாட்டம் அல்லது கோல்ஃப் (Golf) விளையாட்டு சுமார் 500 வருடங்களுக்கு முன் இசுக்காட்லாந்திலிருந்து தொடங்கியது. கோல்ஃப் மட்டை 'க்ளப்' (Club) எனப்படும், இந்த அடிகோல் (கிளப்) கொண்டு வெண்பந்தை மைதானத்திலுள்ள இடர்களில் மாட்டிக் கொள்ளாமல் சிறிய குழிக்குள் தள்ளுவதே ஆட்டம். பொதுவாக நன்கு பராமரிக்கப்படும், கவனத்துடன் உருவாக்கப்பட்ட 9 அல்லது 18 குழிகள் கொண்டது ஒரு ஆட்டமைதானம் (கோர்சு). இந்தக் குழிகளில் ஒவ்வொன்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தட்டுகள் அல்லது அடிகள் (Stroke) மூலம் பந்தை விழச் செய்பவரே வெற்றி பெற்றவர். ஒவ்வொரு குழிக்கும் ஒரு பார் அல்லது சமம் மதிப்பு உண்டு. இது 3 இலிருந்து 5 வரை இருக்கும். 18 குழிகளுள்ள ஒரு ஆட்டமைதானத்திற்கு 72 அடிகள் சமம் ஆகும். இந்த எண்ணிக்கையில் ஆடுபவருக்கு குறை (ஹண்டிகேப்) 0 ஆகும். ஒருவர் 75 அடிகளில் அனைத்துக்குழிகளிலும் பந்தை இட்டால் அவரது குறை 3 ஆகும்.
குழிப்பந்தை அடித்த பிறகு நிறைவு நிலையில் ஒரு வீரர் | |
முதலில் விளையாடியது | 15 ஆம் நூற்றாண்டு, இசுக்காட்லாந்து |
---|---|
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் | |
தொடர்பு | இல்லை |
பகுப்பு/வகை | திறந்த வெளி ஆட்டம் |
கருவிகள் | கால்ஃப் கிளபின், கோல்ஃ பந்து |
தற்போதைய நிலை | |
ஒலிம்பிக் | 1900, 1904, 2016,[1] 2020 [2] |
கோல்ஃப் மைதானங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால், வீரர்கள் சில சமயம் சிறு மின்கல ஊர்திகளில் குழிகளுக்கிடையே பயணம் செய்வதும் உண்டு. இது வணிக உலகில் மிக மதிப்பு பெற்ற விளையாட்டாக இருப்பதால், இப்போட்டிகளில் பரிசுத் தொகையும், புகழும் அதிகம்.
- இந்த விளையாட்டில், தொடக்கக் காலங்களில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இந்த விடயத்தைத் தெரிவிக்கும் ஆங்கிலச் சொற்றொடரான Gentlemen Only, Ladies Forbidden என்பதிலுள்ள சொற்களின் முதலெழுத்தைக்கொண்டே இந்த விளையாட்டிற்கு GOLF எனப் பெயரிடப்பட்டது. தற்காலத்தில் பெண்களும் ஆட அனுமதிக்கப்படுகின்றனர்.