கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம்
From Wikipedia, the free encyclopedia
கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம் (Gotthard Base Tunnel, GBT) சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையினூடே அமைக்கப்பட்டுள்ள இரும்புப் பாதை சுரங்கத்தடம் ஆகும். இது சூன் 1, 2016 அன்று திறக்கப்பட்டது; முழுமையான பயணியர் சேவை திசம்பர் 2016 முதல் தொடங்கும்.[4] 57.09 கிமீ (35.5 மை) நீளமுள்ள இத்தடத்தில் மொத்தம் 151.84 கிமீ (94.3 மை) நீளத்திற்கு சுரங்கங்கள், சுழல்தண்டுகள், நடைவழிகள் அமைக்கப்பட்டுள்ளன.[3] இது உலகின் மிக நீளமான, ஆழமான போக்குவரத்து மலையூடு தடமாகவும்[5][6] ஆல்ப்சினூடே செல்லும் முதல் கீழ்நிலை தட்டையான வழித்தடமாகவும்[7] விளங்குகின்றது.
விரைவான உண்மைகள் மேலோட்டம், தடம் ...
பைய்தோ பல்செயல் நிலையத்தில் திருப்பம் | |
மேலோட்டம் | |
---|---|
தடம் | ஆல்ப்டிரான்சிட் |
அமைவிடம் | சுவிட்சர்லாந்து (ஊரி மாவட்டம், கிராபென்தென், டிச்சினோ) |
ஆள்கூறுகள் | 46.600°N 8.765°E / 46.600; 8.765 |
தற்போதைய நிலை | திறக்கப்பட்டது[1] |
தொடக்கம் | எர்ஸ்ட்பெல்டு (ஊரி) |
முடிவு | போடியோ (டிச்சினோ) |
செய்பணி | |
பணி ஆரம்பம் | 1996 |
திறப்பு | 1 சூன் 2016[2] |
தொழினுட்பத் தகவல்கள் | |
நீளம் | 151.840 கிமீ (94.349 மைல்)[3] |
பாதை நீளம் | 57.09 கிமீ (35.47 மைல்)[3] |
தண்டவாள நீளம் | 57.104 கிமீ (35.483 மைல்) (கிழக்குச் சுரங்கம்) 57.017 கிமீ (35.429 மைல்) (மேற்குச் சுரங்கம்)[3] |
இருப்புப்பாதைகள் | 2 ஒற்றைத் தடக் குழல்[3] |
தட அளவு | 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) (செந்தர இரும்புப் பாதை) |
மின்னாக்கம் | 15 கிவோ 16.7 எர் |
தொழிற்படும் வேகம் | 250 கிமீ/ம (160 மை/ம) வரை |
உயர் புள்ளை | 549 மீ (1,801 அடி)[3] |
தாழ் புள்ளி | 312 மீ (1,024 அடி) (போடியோவில்)[3] |
சுரங்க விடுவெளி | 89 மீ (292 அடி) எர்ஸ்ட்பெல்டிலிருந்து, 237 மீ (778 அடி) போடியோவிலிருந்து[3] |
சாய்வு | 4.055/1000 (வடக்கு) / 6.67/1000 (தெற்கு)[3] |
வழிக்குறிப்புப் படம் | |
மூடு