சான் கூடினஃபு
From Wikipedia, the free encyclopedia
சான் பானிசிட்டர் கூடினஃபு (John Bannister Goodenough, பிறப்பு: 25 சூலை 1922) ஓர் அமெரிக்கப் பேராசிரியர். இவர் திண்மநிலை இயற்பியலாளரும், நோபல் விருதாளரும் ஆவார். இவர் டெக்சசு ஆசுட்டினில் உள்ள தெக்சாசு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையிலும் பொருளறிவியல் துறையிலும் பேராசிரியராக உள்ளார். இவர் இலித்தியம் மின்மவணு மின்கலங்கள் பற்றிய ஆய்விற்கும் கூடினஃபு-கானமோரி விதிகளுக்கும் புகழ் பெற்றவர். இவர் இசுட்டான்லி விக்கிங்காம், அக்கிரா யோசினோ ஆகிய இருவரோடு சேர்ந்து, இலித்தியம்-மின்மவணு மின்கல வளர்ச்சிகளுக்காக செய்த ஆய்வுகளுக்காக 2019 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை தனது 97-வது அகவையில் வென்றார். இவரே வரலாற்றில் மிகவும் வயதான காலத்தில் நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.[2]
சான் கூடினஃப் John Goodenough | |
---|---|
பிறப்பு | சான் பானிசுட்டர் கூடினஃப் சூலை 25, 1922 (1922-07-25) (அகவை 101) செனா, செருமனி |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) |
கல்வி | யேல் பல்கலைக்கழகம் (BS) சிக்காகோ பல்கலைக்கழகம் (முதுகலை |
ஆய்வு நெறியாளர் | கிலாரன்சு சேனர் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | பில் டேவிட்[1] |
அறியப்படுவது | இலித்தியம் அயனி மின்கலம், கூடினஃப்-கனமோரி விதிகள் |
விருதுகள் | சப்பான் பரிசு (2001) என்ரிக்கோ பெர்மி விருது (2009) அறிவியலுக்கான தேசிய விருது (2011) ஐஇஇஇ விருது(2012) சார்லசு இசுட்டார்க் திரேப்பர் பரிசு (2014) வெல்ச் விருது (2017) கோப்லி பதக்கம் (2019) வேதியியலுக்கான நோபல் பரிசு (2019) |
2014 இல் இவர் இலித்தியம்-மின்மவணு மின்கல வளர்ச்சிகளுக்காக செய்த ஆய்வுகளுக்காக திரேப்பர் பரிசு பெற்றார்.[3]