சிரை
From Wikipedia, the free encyclopedia
சிரைகள் (Veins) அல்லது நாளங்கள் இருதயத்தை நோக்கி குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழல்கள் ஆகும். இழையங்களிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக நுரையீரல் சிரையும், தொப்புள் சிரையும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன. சிரைகளுக்கு மாறுபாடாக, தமனிகள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் சிரை, விளக்கங்கள் ...
சிரை | |
---|---|
மனித உடலில் உள்ள முதன்மையான நாளங்கள் | |
மூன்று முதன்மையான அடுக்குகளைக் கொண்ட ஒரு நாளத்தின் அமைப்பு. இணைப்பிழையம் வெளி அடுக்குகாவும், மெல்லிய தசை மைய அடுக்காகவும், அகச்சீத செல்சகளுடன் வரிசையாக உள் அடுக்காகவும் நாளம் அமைந்துள்ளது. | |
விளக்கங்கள் | |
அமைப்பு | சுற்றோட்டத் தொகுதி |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | vena |
MeSH | D014680 |
TA98 | A12.0.00.030 A12.3.00.001 |
TA2 | 3904 |
FMA | 50723 |
உடற்கூற்றியல் |
மூடு
சிரைகள் தமனிகளைவிட குறைந்த தசையுடனும், பல முறை தோலிற்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கும். குருதி பின்னோட்டத்தைத் தடுக்க பெரும்பாலான சிரைகளில் தடுக்கிதழ்கள் அமைந்துள்ளன.